ஐ.சி.சி வெளியிட்ட கடந்த 10 ஆண்டுகளின் தலைசிறந்த வீரர்கள் பட்டியல். தமிழக வீரரும் லிஸ்ட்ல இருக்காரு – விவரம் இதோ

Kohli
- Advertisement -

ஐசிசி ஒவ்வொரு வருடமும் ஆண்டின் மிகச்சிறந்த வீரர் வீராங்கனைகளை தேர்வு செய்து வெளியிட்டு வரும். தற்போது இந்த பத்தாண்டு (2010-2020) முடிவடைவதால் 2010 முதல் 2020 ஆம் ஆண்டு வரை மிகச் சிறப்பாக செயல்பட்டு சிறந்த வீரர்களாக விளங்கிய வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவிக்க இருக்கிறது. இதன்படி கடந்த பத்தாண்டுகளில் மிகச் சிறப்பாக விளையாடி இறுதிப் பட்டியலில் இடம் பெற்ற வீரர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது ஐசிசி.

Kohli-2

- Advertisement -

இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 5 பிரிவுகளில் இடம் பெற்று இந்திய அணிக்கு பெருமை சேர்த்திருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் உலகின் தலைசிறந்த வீரர், தலைசிறந்த ஒருநாள் போட்டியின் வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், உத்வேகம் அளிக்கக் கூடிய வீரர், சிறந்த 20 ஓவர் போட்டி வீரர் ஆகிய பிரிவுகளில் அவர் இடம் பிடித்திருக்கிறார். அதே நேரத்தில் 10 ஆண்டுகளில் தலைசிறந்த வீரர் பட்டியலில் விராட் கோலியுடன் சேர்த்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் மற்றும் தமிழகத்தின் ஜாம்பவான் வீரர் அஸ்வின் இடம் பெற்றிருக்கிறார்.

அதனை தாண்டி இங்கிலாந்திலிருந்து ஜோ ரூட், நியூஸிலாந்தில் இருந்து கேன் வில்லியம்சன், ஆஸ்திரேலியாவிலிருந்து ஸ்டீவன் ஸ்மித், தென்னாப்பிரிக்காவிலிருந்து ஏபி டிவிலியர்ஸ், இலங்கையிலிருந்து குமார் சங்ககாரா ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றனர். சிறந்த ஒருநாள் வீரர்கள் பட்டியலில் இந்தியாவில் இருந்து தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.

Ashwin

இலங்கையின் மலிங்கா ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க், தென்னாப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். சிறந்த டெஸ்ட் வீரர் பட்டியலில் இந்தியாவின் விராத் கோலி, நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் இலங்கையின் ரங்கனா ஹெராத், பாகிஸ்தானின் யாசிர் ஷா ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றன.

ASHWIN

சிறந்த டி20 வீரர்களுக்கான பட்டியலில் ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் இந்தியாவின் விராத் கோலி தென்னாப்பிரிக்காவில் இம்ரான் தாகிர் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச், இலங்கையின் லசித் மலிங்கா வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெய்ல், இந்தியாவின் ரோகித் சர்மா ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். அதனை தாண்டி உத்வேகம் மிக்க வீரர்களுக்கான பட்டியலில் விராட் கோலி, மகேந்திர சிங் தோனி, மிஸ்பா உல் ஹக் ஆகியோர் இருக்கின்றனர்..

Advertisement