ஸ்டீவ் ஸ்மித்தின் அபாரமான ஆட்டத்திற்கு காரணம் இதுதான் – ஐ.சி.சி வெளியிட்ட பதிவு

Smith
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான ஆஷஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி ஒரு வெற்றியும், இங்கிலாந்து அணி ஒரு வெற்றி மற்றுமொரு டிரா என தொடர் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் நான்காவது போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது.

Smith 1

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இரண்டாவது போட்டியில் ஆர்ச்சர் பந்து வீச்சில் காயமடைந்த ஸ்மித் நான்காவது போட்டியில் அணிக்குத் திரும்பினார். வார்னர் விரைவில் ஆட்டமிழக்க நான்காவது வீரராக ஸ்மித் களம் இறங்கி சிறப்பாக விளையாடினார். இங்கிலாந்து பந்துவீச்சை அசாதாரணமாக எதிர்கொண்ட ஸ்மித் தனது 26வது சதத்தை பூர்த்தி செய்தார். இறுதியில் 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தது அவர் வெளியேறினார்.

இந்நிலையில் ஐ.சி.சி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஸ்டீவ் ஸ்மித் குறித்து ஒரு பதிவினை வெளியிட்டது. அதில் மற்ற பேட்ஸ்மேன்கள் பந்தை எப்படி பார்க்கிறார்கள் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்திற்கு பந்து எப்படி தெரிகிறது என்ற வித்தியாசமான பதிவை ஐசிசி பதிவிட்டு இருந்தது.

அதன்படி மற்ற பேட்ஸ்மேன்களுக்கு பந்து சிறியதாகவும், ஸ்மித்திற்கு மட்டும் பந்து பீச் பால் அளவில் தெரிவதாகவும் அதனால்தான் ஸ்மித்தால் இவ்வளவு சிறப்பாக விளையாட முடிகிறது என்று அதில் குறிப்பிட்டுள்ளது. ஐ.சி.சி யின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement