உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான விதிமுறைகளை வெளியிட்ட ஐ.சி.சி – டிரா ஆனால் என்ன ஆகும் தெரியுமா ?

INDvsNZ
- Advertisement -

கிரிக்கெட் உலகில் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்போடு ஜூன் மாதம் 18 ஆம் தேதி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இங்கிலாந்து நாட்டின் சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற உள்ள இந்த இறுதிப் போட்டிக்காக இரு அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணி இங்கிலாந்து சென்று அடைந்தது.

INDvsNZ

- Advertisement -

தற்போது இந்தியாவில் 14 நாள் குவாரண்டனில் இருக்கும் இந்திய அணி ஜூன் இரண்டாம் தேதி இங்கிலாந்து செல்லும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன் காரணமாக தற்போது இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை யார் கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த இறுதிப் போட்டிக்கான விதிமுறைகளை ஐசிசி இன்று அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. அந்த விதிமுறைப்படி இந்த போட்டி டிரா ஆனால் சாம்பியன்ஷிப் கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு இரு அணிகளுமே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த இறுதிப் போட்டிக்கான சில விதிமுறைகளை ஐசிசி வெளியிடுகையில் கீழ்கண்ட விதிமுறைகள் மிகவும் முக்கியமானவைகளாக பார்க்கப்படுகின்றன. அவை இதோ :

INDvsNZ

போட்டி ஐந்து நாட்கள் நடைபெறும். அதே போன்று ஒவ்வொரு நாளும் தலா 90 ஓவர்கள் வீசப்படும் மழை காரணமாக ஓவர்கள் குறைவாக வீசப்பட்டால் ஆறாவது நாளில் போட்டி நடைபெறும். இந்த ஆறாவது நாள் இறுதிப்போட்டிக்கான “ரிசர்வ் டே” வாக அறிவிக்கப்படும். ஒரு நாள் முழுவதுமே போட்டி மழையால் அல்லது மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டால் 6 ஆவது நாள் போட்டி முழுவதுமாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

INDvsNZ

மேலும் டிஆர்எஸ் செல்வதற்கு முன்னர் அம்பயர் ஏன் அவுட் கொடுத்தார் அல்லது நாட்அவுட் கொடுத்தார் என வீரர்கள் அம்பயரிடம் கேட்டுவிட்டு பிறகு டிஆர்எஸ் முடிவை எடுக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோன்று மைதானத்தில் வீரர்கள் இடையே சர்ச்சை ஏற்பட்டால் நடுவர்கள் மேட்ச் ரெபிரியிடம் முறையிட வேண்டும் தன்னிச்சையாக முடிவு எடுக்கக் கூடாது என ஐசிசி விதிமுறையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement