அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : டெஸ்ட் வெற்றிக்கு எப்படி புள்ளிகள் வழங்கப்படும் – ஐ.சி.சி விதிமுறை

WTC

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது 2021 ஆம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

nz

அதன்படி இத்தொடரின் முதல் போட்டியாக தற்போது இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிராக விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான புள்ளிகள் எவ்வாறு பிரிக்கப்படும் என்பது குறித்து ஐசிசி தற்போது தங்களது விளக்கத்தை அளித்துள்ளது.

- Advertisement -

ஏற்கனவே இம்முறை நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கொரோனா பரவல் காரணமாக விதிமுறைகள் நடுவிலேயே மாற்றப்பட்டதால் அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இதற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் வெற்றிக்கான புள்ளிகளை சரியாக பிரித்து வழங்க ஐசிசி முடிவு செய்துள்ளது. அதன்படி 2021 ஆம் ஆண்டு முதல் 23ஆம் ஆண்டு வரை நடைபெறும் டெஸ்ட் தொடர்களை கணக்கில் கொண்டு அதில் அதிக வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிரு இடங்கள் வகிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

WTC

அதேபோல் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஒவ்வொரு அணியும் தாய் நாட்டில் மூன்று தொடரையும், வெளிநாடுகளில் மூன்று தொடர்களிலும் விளையாடி இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Southee

மேலும் ஒரு டெஸ்ட் போட்டியில் அணி வென்றால் 12 புள்ளிகள் கிடைக்கும். அதே போன்று டிரா செய்தால் இரு அணிகளுக்கும் 4 புள்ளிகள் கிடைக்கும். போட்டி சமனில் முடிந்தால் இரு அணிகளுக்கும் தலா 6 புள்ளிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெஸ்ட் போட்டிகளில் மெதுவாக வீசப்படும் ஒவ்வொரு ஓவருக்கும் ஒட்டு மொத்த எண்ணிக்கையில் இருந்து ஒரு புள்ளி கழிக்கப்படும் எனவும் ஐசிசி தெரிவித்துள்ளது.

Advertisement