ஐ.சி.சி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை : இந்திய இரட்டையர்கள் அசத்தல் – அதிகாரப்பூர்வ விவரம் இதோ

Kohli-3
- Advertisement -

கிரிக்கெட் போட்டிகளின் தலைமை நிர்வாகமான ஐசிசி அவ்வப்போது நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளின் முடிவில் சீரான இடைவெளிகளில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான புதிய தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.

icc

- Advertisement -

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று நேற்றுடன் முடிவடைந்தது. இத்தொடரை 2 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இந்த தொடர் முடிந்த பின்னர் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டின் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது.

இந்த புதிய தரவரிசை பட்டியலில் பேட்ஸ்மேன்களுக்கான வரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 871 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அதற்கடுத்து 855 புள்ளிகளுடன் ரோகித் இரண்டாவது இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் அணியை சேர்ந்த இளம் வீரரான பாபர் அசாம் மூன்றாவது இடத்திலும், நியூசிலாந்தை சேர்ந்த அனுபவ வீரர் ராஸ் டைலர் நான்காவது இடத்திலும் உள்ளார்.

Kohli

தென்ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டூப்ளெஸ்ஸிஸ் ஐந்தாவது இடத்திலும், நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் ஆறாவது இடத்திலும், ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் ஏழாவது இடத்திலும், தொடக்க ஆட்டக்காரர் வார்னர் எட்டாவது இடத்திலும் இருக்கின்றனர்.

Rohith

தென்னாபிரிக்க அணியின் துவக்க வீரர் டிகாக் 9-வது இடத்திலும், நடைபெற்று முடிந்த இரு அணிகளுக்கும் இடையேயான 3 ஆவது போட்டியில் சதமடித்த இங்கிலாந்து அணியின் பேர்ஸ்டோ 10 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement