டி20 தரவரிசையில் கோலி, ரோஹித்தை முந்திய இந்திய அணியின் இளம் வீரர் – ஐ.சி.சி தரவரிசை பட்டியல் இதோ

Kohli
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் வீரர்களை வைத்து ரேங்கிங் பட்டியலை வெளியிட்டு வரும் அந்த வகையில் தற்போது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது புதிய t-20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

Eng

- Advertisement -

நடைபெற்று முடிந்த இந்த டி20 தொடரில் இரண்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் இங்கிலாந்து தொடரை கைப்பற்றியது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடி 129 ரன்கள் அடித்த தாவித் மலன் டி20 தரவரிசையில் பாகிஸ்தான் வீரர்கள் பாபர் அசாம் பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார். கடைசியாக விளையாடிய 16 போட்டிகளில் 682 ரன்களை குவித்துள்ளார்.

அவர் கடைசியாக விளையாடிய 16 போட்டிகளில் 48.71 சராசரியும், 146.66 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சதம் மற்றும் 7 அரை சதங்களை அவர் அடித்துள்ளார். 877 புள்ளிகளுடன் மலன் முதலிடத்திலும், 869 புள்ளிகளுடன் பாபர் அசாம் இரண்டாம் இடத்திலும், 835 புள்ளிகளுடன் ஆரோன் பின்ச் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

rahul 3

இந்த பட்டியலில் 824 புள்ளிகளுடன் யாரும் எதிர்பாரா வகையில் இந்திய அணியின் இளம் வீரரான கேஎல் ராகுல் நான்காவது இடத்திலும் உள்ளனர். இதில் சிறப்பான விடயம் யாதெனில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை ராகுல் பின்னுக்குத் தள்ளியுள்ளார் விராட் கோலி இந்த தர வரிசை பட்டியல் 9-வது இடத்திலும், ரோகித் பத்து இடங்களுக்கு மேலும் தள்ளப்பட்டுள்ளார்.

rahul 4

இந்திய அணியின் அதிரடி வீரரான ராகுல் தொடர்ச்சியாக டி20 போட்டியில் சிறப்பாக விளையாடியதால் அவர் இந்த புள்ளி பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement