ஐ.சி.சி வெளியிட்ட ஒருநாள் தரவரிசை பாட்டியல். கோலி முதலிடம் – ரோஹித் எத்தனையாவது இடம் தெரியுமா ?

Rohith
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆன ஐசிசி அவ்வப்போது நடைபெறும் சர்வதேச தொடர்களின் அடிப்படையில் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் தரவரிசைப் பட்டியலை வெளியிடும். அந்த வகையில் தற்போது நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்குப் பின்னர் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

kohli 2

- Advertisement -

அதன்படி ஐசிசி வெளியிட்டுள்ள இந்த ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய கோலி 2 அரை சதங்களை அடித்திருந்தார். இதனை அடுத்து அவர் 870 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.

அதேவேளையில் காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் முற்றிலும் விளையாடாத ரோகித் சர்மா 842 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். ரோகித் சர்மா விட 5 புள்ளிகள் குறைவாக 837 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரரான பாபர் அசாம் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Rohith

இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடருக்குப் பின்னர் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் இடம் பிடித்து விளையாடி வரும் அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியா ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இரண்டு 90 ரன்களை குவித்து இருந்தார். இதன் மூலம் அவர் தனது வாழ்வின் சிறந்த பொசிஷன் ஆன 50 இடத்திற்குள் வந்து 49 வது இடத்தை பிடித்துள்ளார்.

Pandya-4

ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் 799 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளார். பந்துவீச்சை பொறுத்தவரை இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா 700 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். டிரென்ட் போல்ட் 722 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். 2 ஆவது இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் இளம்வீரரான முஜிபுர் ரஹ்மான் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement