Virat Kohli : விராட் கோலியின் கோரிக்கையை நிராகரித்த – ஐ.சி.சி

உலகக்கோப்பை போட்டிகள் இப்போது தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆனால் இங்கிலாந்தில் தற்போது பெய்யும் மழை காரணமாக சில போட்டிகள் நடக்காமல் இருப்பது ரசிகர்களிடையே வருத்தத்தை

Kohli
- Advertisement -

உலகக்கோப்பை போட்டிகள் இப்போது தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆனால் இங்கிலாந்தில் தற்போது பெய்யும் மழை காரணமாக சில போட்டிகள் நடக்காமல் இருப்பது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

led bails

- Advertisement -

இதற்கிடையில் போட்டிகளின்போது ஸ்டம்பில் பந்து தாக்கினாலும் பைல்ஸ் அதிகப்படியான வெயிட் காரணமாக கீழே விழாதது தற்போது அனைத்து அணி கேப்டன்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதன்படி பந்துவீச்சாளர்கள் கடினப்பட்டு பந்துவீசியும் பைல்ஸ் கீழே விழாமல் இருப்பதால் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டிலிருந்து தப்பிக்கிறார்கள். இந்த தொடரில் மட்டும் 10 முறை பந்து ஸ்டம்பில் அடித்தும் பைல்ஸ் விழாமல் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் கூட வார்னர் ஒரு ரன் எடுத்திருந்தபோது பும்ரா பந்துவீச்சில் போல்டானார். ஆனால் பைல்ஸ் விழாததால் வார்னர் தப்பித்தார். இதனை அடுத்து கோலி மற்றும் பின்ச் ஆகியோர் ஐசிசியிடம் இந்த பைல்ஸ்களை மாற்றிவிட்டு புதிய பைல்ஸ்களை வைக்குமாறு கோரிக்கை வைத்திருந்தனர்.

bails

ஆனால் இவர்களின் கோரிக்கையை தற்போது ஐ.சி.சி நிராகரித்துள்ளது. ஏனெனில் கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து எல் இ டி பைல்ஸ்கள் பயன்பாட்டில் உள்ளன. திடீரென்று பாதி உலக கோப்பையில் இதுபோன்ற மாற்றத்தை செய்ய முடியாது. மேலும் எல்இடி பைல்ஸ்கள் மூலம் அம்பயர்களின் வேலைப்பளு குறைக்கப்பட்டுள்ளது. எனவே அதனை மாற்றும் எண்ணம் தற்போது இல்லை என்று ஐசிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement