பிறந்தநாளை முன்னிட்டு தல தோனிக்கு ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட ஐ.சி.சி – வீடியோவால் கொந்தளித்த ரசிகர்கள்

Dhoni
- Advertisement -

ஜூலை 7ஆம் தேதி இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான தோனியின் பிறந்தநாள் அவரை கவுரப்படுத்தும் விதமாக ஐ.சி.சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

ரசிகர்கள் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் அந்த வீடியோவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு தோனி என்பது வெறும் பெயர் மட்டுமல்ல. அது இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியது பல வீரர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார் என்று தலைப்புடன் icc பகிர்ந்துள்ளது.

இந்நிலையில் தோனியின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதனை கண்ட தோனி ரசிகர்கள் பலர் உலகக் கோப்பை தொடர் முடியும் முன் இந்த வீடியோவை எதற்கு வெளியிட்டி உள்ளீர்கள் ? தோனி ஓய்வு பெறப் போகிறார் என்பதை சுட்டிக்காட்ட வா என்பது போல தோனியின் ரசிகர்கள் இந்த பதிவுக்கு பதில் அளித்து வருகின்றனர்.

dhoni

ஆனால் தோனியின் பிறந்த நாளான இன்று அவரை கவுரப்படுத்தும் நோக்கிலேயே icc தோனி குறித்த இந்த வீடியோவை அழகாக பதிவு செய்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement