கொரோனா எதிரொலி : டி20 உலகக்கோப்பை தொடருக்கு ஏற்பட்ட பாதிப்பு – ஐ.சி.சி அறிவிப்பு

Cup
- Advertisement -

7வது டி20 உலக கோப்பை தொடர் இந்த வருடம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. கரோனா பாதிப்பு காரணமாக இது நடக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொள்ளும். 12 அணிகள் நேரடியாக தரவரிசைப் பட்டியல் மூலம் தேர்வாகும்.

Cup

- Advertisement -

மீதமிருக்கும் நான்கு அணிகளும் தகுதி சுற்று மூலம் உலகம் முழுவதும் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும். ஆசியாவில் ஒரு அணியும், ஆப்பிரிக்காவில் ஒரு அணியும், ஐரோப்பாவில் ஒரு அணியும், அமெரிக்க கண்டத்தில் ஒரு அணி என நான்கு அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்ந்தெடுக்கப்படும்.

இந்த தகுதி சுற்று போட்டிகள் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் நடக்கவிருந்தது. ஆசியாவில் மற்றும் ஆப்பிரிக்காவில் ஏப்ரல் மாதத்திலும், ஐரோப்பாவில் மே மாதத்திலும், அமெரிக்க கண்டத்தில் ஜூன் மாதத்திலும் நடக்கவிருந்தது. இதனை ஒட்டுமொத்தமாக ஐசிசி தற்போது தள்ளி வைத்துள்ளது. இதுகுறித்து ஐசிசி அதிகாரி கூறியதாவது :

icc

எங்களுக்கு தற்போது கிரிக்கெட்டை விட வீரர்கள் மற்றும் மக்களின் நலனே முக்கியம். அவர்களது ஆரோக்கியமும், நோயில்லா வாழ்வு மிக முக்கியம். இதன் காரணமாக தகுதிச் சுற்றுப் போட்டிகளில் தள்ளிவைக்கப்பட்டுள்ளது .ஏற்கனவே ஐபிஎல் போன்ற மிகப்பெரிய தொடரே தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக இந்த சிறிய தொடரை தள்ளி வைப்பதால் நமக்கு எந்த இழப்பும் ஏற்படப்போவதில்லை. கரோனா வைரசின் வீரியம் குறைந்து விட்டால் இவற்றையும் ஒரே நேரத்தில் நடத்தி உலக கோப்பை தொடருக்கு அணிகளை அனுப்புவது குறித்து திட்டமிடப்படும் என்று தெரிவித்துள்ளார் அந்த அதிகாரி.

IPL-1

இந்தியாவில் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல் தொடர் 29 ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடர் இந்தாண்டு திட்டமிட்டபடி நடைபெறாது என்பதற்கே வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.

Advertisement