ஐசிசி ஆண்டுதோறும் சிறப்பாக விளையாடும் கிரிக்கெட் அணி மற்றும் வீரர்களை தேர்வு செய்து கௌரவித்து பாராட்டும் வகையில் தற்போது இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து மாதந்தோறும் சிறப்பாக விளையாடும் வீரரை “பிளேயர் ஆப் தி மன்த்” என்ற விருதை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடும் வீரர்களை தேர்வு செய்து ரசிகர்களின் ஓட்டு எண்ணிக்கை அடிப்படையில் வெற்றியாளர்களை மாதம் தோறும் ஐசிசி வெளியிட்டு வருகிறது.
அதன்படி ஜனவரி மாதத்திற்கான விருதை இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் பெற்றார். அதனைத்தொடர்ந்து பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மாதங்களில் அஸ்வின் மற்றும் புவனேஸ்வர் குமார் என அடுத்தடுத்து இந்திய வீரர்கள் வெற்றி பெற்று வந்தனர். பிறகு கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் அணியை சேர்ந்த பாபர் அசாம் பெற்றார். அதனைத் தொடர்ந்து தற்போது மே மாததிற்கான ஐசிசி விருதுகள் பட்டியலில் இடம்பெற்றிருந்த வங்கதேச அணியின் விக்கெட் கீப்பிங் முஷ்பிகுர் ரஹிம் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரசிகர்களின் வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் இடத்தைப் பிடித்த முஷ்பிக்குர் ரஹிம் இந்த மே மாதத்திற்கான சிறந்த வீரர் என்ற விருதினை ஐசிச மூலம் பெற்றுள்ளார். இருப்பினும் இந்த முடிவை கேலி செய்து சில நெட்டிசன்கள் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஏனெனில் கடைசியாக நடைபெற்று முடிந்த இலங்கை தொடரின்போது இலங்கை பேட்ஸ்மேனை கீழே தள்ளி விடும்படி பவுலரை அறிவுறுத்திய இவருக்கா இந்த விருதினை தருவது என்று குறிப்பிட்டுள்ளனர்.
1/1 – 100s/50s ⚡
237 ODI runs 🔥Presenting the ICC Men’s Player of the Month for May 2021 👇#ICCPOTM pic.twitter.com/bOn0aN0S37
— ICC (@ICC) June 14, 2021
அதுமட்டுமின்றி பெஸ்ட் பிளேயர் விருது கொடுக்க உங்களுக்கு ஒரு மோசமான வீரர் தான் கிடைத்தாரா ? என்பது போல ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். நடைபெற்று முடிந்த இலங்கை தொடரில் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர் ஒரு அரை சதம் மற்றும் ஒரு சதம் என 237 ரன்களை முஷ்பிகுர் ரஹிம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.