கொரோனா பாதிப்பால் கிரிக்கெட்டில் ஏற்படவுள்ள மாறுதல் – புதிய விதிமுறையை போட்ட ஐ.சி.சி

ICC
- Advertisement -

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது கிரிக்கெட் போட்டிகளும் எப்போது துவங்கும் என்று தெரியாத நிலையே நீடிக்கிறது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆன ஐ.சி.சி இனிவரும் கிரிக்கெட் போட்டிகளில் ஒருமாறுதலை கொண்டுவர உள்ளது. அதன்படி கிரிக்கெட் பந்தில் இந்த மாற்றம் நிகழ உள்ளது.

- Advertisement -

அதாவது கிரியேட் பந்து ஒருபுறம் சொரசொரவென்று மறுபுறம் பளபளவென்று இருக்கும். இது தான் பந்திற்க்கு வளைவான (ஸ்விங்) இயக்கத்தை கொடுக்கும். பந்து வீச வீச 20 முதல் 25 ஓவர்களில் இரண்டு பக்கமும் நன்றாக தேய்ந்து விடும். இதனால் பந்து பிடிக்கும்படி கிரிப் இருக்காது.
இதன் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் பந்தில் எச்சில் தடவி நன்றாக தேய்ப்பார்கள். அப்போது சொரசொரவென்று மாறிவிடும்.

இந்நிலையில் கரோனா வரைஸ் எச்சிலின் மூலம் கடுமையாக பரவுவதன் காரணமாக அதில் எச்சிலை தேய்க்க ஐசிசி கிரிக்கெட் வாரியம் தடை விதிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக இனி வரும் சில தொடர்களில், அதாவது கரோனா வைரஸ் தாக்கம் முற்றிலுமாக முடியும் வரை பந்தில் எச்சில் தடவுவதை ஐசிசி தடை செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Ishanth

ஏனெனில் தொடர்ந்து பல வீரர்களின் எச்சில் அந்த பந்தில் படுவதால் வீரர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. வீரர்களில் ஒருவருக்கு கரோனா இருந்தாலும் அது படிப்படியாக அணிகளுக்கும், அணிகளுக்கு பின்னால் வேலை செய்யும் பயிற்சியாளர்கள் மருத்துவர்களின் என அனைவருக்கும் பரவ மிக எளிதான வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

அதே நேரத்தில் பந்துகளில் சிக்சர் அடிக்கும் போது அந்த பந்து மைதானத்திற்குள் வரும் ரசிகர்கள் கைக்கு செல்லும். அவர்களில் ஒருவருக்கு பரவினால் கூட இந்த விஷயம் தீவிரமாக மாறக்கூடும். இதன் காரணமாக ஐசிசி இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.இதனைத் தாண்டி தற்போது வரை எந்த ஒரு தொடரும் அறிவிக்கப்படவில்லை.

இந்த விதி அமல் படுத்தப்பட்டால் அடுத்து நடக்கவிருக்கும் தொடரில் இந்த விதி நடைமுறைக்கு வரலாம் என்று தெரிகிறது. கிட்டத்தட்ட ஐபிஎல் தொடர் நடப்பது உறுதி செய்யப்பட்டால் முதன் முதலாக இந்த விதி ஐபிஎல் தொடரில் பயன்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

Advertisement