2020 டி20 உலகக்கோப்பை தொடர் ஒத்திவைப்பா ? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட – ஐ.சி.சி

Cup
- Advertisement -

இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 18ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை 20 ஓவர் உலக கோப்பை தொடர் நடத்தப்பட நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக விளையாட்டு தொடர்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளதால் இந்த ஆண்டு திட்டமிட்டபடி இந்த உலக கோப்பை தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்கனவே இருந்தது.

cup

- Advertisement -

இருப்பினும் இந்த உலக கோப்பை தொடர் துவங்க இன்னும் பல மாதங்கள் உள்ளதால் அதை ரத்துசெய்வது பற்றியோ அல்லது ஒத்தி வைப்பது குறித்தோ இதுவரை ஆலோசிக்கவில்லை எனவே உலக கோப்பையில் தன்மை குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. மேலும் இந்த உலகக் கோப்பை தொடர் குறித்த முடிவுகளை இன்னும் ஆலோசிக்க வில்லை என்றும் தலைமைச் செயல் அதிகாரி நிக் ஹாஃலே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது டி20 உலகக் கோப்பையை திட்டமிட்டபடி நடத்தலாமா அல்லது அடுத்த ஆண்டு வரை ஒத்தி வைக்கலாமா என்பது குறித்து ஐசிசி நிர்வாகக்குழு மே 28ஆம் தேதி கூடி ஆலோசனை செய்து முடிவுகளை வெளியிட இருக்கிறது என்று ஐசிசியின் நிர்வாக குழு உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். மேலும் கூட்டத்தின் போது மூன்று முக்கிய விஷயங்களை விவாதிப்போம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

T20

முதலில் திட்டமிட்டபடி போட்டியை நடத்துவது, இரண்டாவது ரசிகர்களை மைதானத்தில் அனுமதிப்பது, மூன்றாவது ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவது என்ற மூன்று யோசனைகளையும் ஆலோசிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் தொடர்ந்த அவர் இதில் கடைசி கட்டமாக உலக கோப்பை போட்டியை இந்த ஆண்டு நடத்த முடியாமல் போனால் அடுத்த ஆண்டு நடத்துவது குறித்து பேசப்படும் என்றும் தெரிவித்தார்.

ஆனால் திட்டமிட்டபடி இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடத்த முடியாமல் போனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மிகப் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் என்று தெரிகிறது. எனினும் மே 28-ஆம் தேதி ஐசிசி ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இது தொடர்பான விஷயங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement