சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி டெஸ்ட் போட்டிகளின் மீதான வரவேற்பை மீண்டும் ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை அறிமுகப்படுத்தியது. அந்த வகையில் இதுவரை மூன்று முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரானது வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த வேளையில் அடுத்ததாக 2027-29 ஆண்டுகளுக்கான நான்காவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியானது நடைபெறவுள்ளது.
4 நாள் டெஸ்ட் போட்டிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள : ஜெய் ஷா
இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் முதல் தொடராக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நாளை மறுதினம் ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்க உள்ளது. பலம் வாய்ந்த இரு அணிகளுக்கு இடையேயான இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் அதிகளவு கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் முதன்மை நாடுகளை தவிர்த்து சிறிய நாடுகளுக்காக நான்கு நாள் ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளை நடத்த ஐ.சி.சி திட்டமிட்டுள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அந்தவகையில் வெளியான தகவலின் படி : அனுபவம் வாய்ந்த அணிகள் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வரும் வேளையில் சிறிய அணிகளும் அதிக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக இந்த நான்கு நாள் ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளை நடத்த ஐசிசி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஒன்பது நாடுகள் இடையே 27 டெஸ்ட் தொடர்கள் நடைபெறுகின்றன. அதில் 17 தொடர்கள் வெறும் இரண்டு போட்டிகளுடன் முடிந்து விடுகிறது. மேலும் சில தொடர்கள் 3 போட்டிகளிலும் முடிந்து விடுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற பலமான நாடுகள் மட்டுமே 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றன.
இந்நிலையில் ஐசிசி தலைவரான ஜெய் ஷா சிறிய நாடுகளுக்கு இடையேயான நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளுக்கு முழு ஆதரவை தெரிவித்துள்ளார். ஐந்து நாள் போட்டிகளை அடுத்த அதிக செலவும், காலதாமதம் ஆகும் என்பதனாலே சிறிய நாடுகள் டெஸ்ட் போட்டிகளில் அதிகம் விளையாட தயங்குகின்றன.
இதையும் படிங்க : சொல்றத கேளுங்க.. விராட் கோலியின் 4-ஆம் இடத்தில் இவர் இறங்குவது தான் சரியா இருக்கும் – சபா கரீம் கருத்து
எனவே 4 நாள் டெஸ்ட் போட்டிகளை கொண்டு வந்து அவர்களுக்காக டெஸ்ட் தொடரை நடத்த முயற்சிப்போம் என்றும் வழக்கமான டெஸ்ட் போட்டிகளில் ஒரு நாளுக்கு 90 ஓவர்கள் வீசப்படும் நிலையில் 4 நாள் டெஸ்ட் போட்டிகளுக்கு 98 ஓவர்கள் வீசப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் ஐ.சி.சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் முற்றிலும் சிறிய அணிகள் மட்டுமே பங்கேற்கும் என்றும் கூறப்படுகிறது.



