டி20 உலகக்கோப்பை குறித்த முக்கிய அறிவிப்பு இந்த நாளில் வெளியாகும் – ஐ.சி.சி அறிக்கை

Cup
- Advertisement -

கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் துவக்கும் நடவடிக்கையில் கிரிக்கெட் வாரியங்கள் ஈடுபட்டு வருகிறது. பாகிஸ்தான் அணி ஆகஸ்ட் மாதத்தில் இங்கிலாந்து சென்று விளையாட உள்ளது. அதே நேரத்தில் டி20 உலக கோப்பை தொடர் மற்றும் ஐபிஎல் தொடர் ஆகியவற்றை நடத்த பிசிசிஐ கடுமையான முனைப்பு காட்டி வருகிறது. ஆஸ்திரேலியாவில் நவம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் டி20 உலகக் கோப்பை தொடர் நடப்பதாக இருந்தது.

- Advertisement -

ஆனால் தற்போது அது சந்தேகமாக உள்ளது. ஏனெனில் அந்த காலகட்டத்தில் ஐபிஎல் தொடரை நடத்தலாம் என்று பல கிரிக்கெட் வாரியங்களும் யோசனை கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி 6 மாதங்களுக்கு ஆஸ்திரேலிய வான்வழி போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் வீரர்கள் பயணிப்பதிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த ஆலோசனைகளும் விளக்கங்களும் வரும் மே 26 முதல் 28 ஆம் தேதி வரை நடக்க உள்ள ஐசிசி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

தற்போதைக்கு மூன்று வாய்ப்புகள் தான் உள்ளது. உலக கோப்பை தொடரை அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை தள்ளி வைப்பதில் சிக்கல் இல்லை. அதற்கு அடுத்து தள்ளிவைக்க முடியாது. அந்த நேரத்தில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐபிஎல் தொடரை நடத்தி விடலாம். அவ்வாறு தள்ளிவைக்கப்படும்போது இந்தியாவில் நடைபெற இருந்த 2021 உலககோப்பை டி20 தொடர் அதற்கு அடுத்த வருடம் தள்ளிப்போகும்.

T20

இரண்டாவது 2020 ஆம் ஆண்டு நடக்கும் உலக கோப்பை தொடரை இந்தியவும், அடுத்த வருடம் இந்தியாவில் நடக்கும் டி20 உலக கோப்பை தொடரை ஆஸ்திரேலியாவும் பரிமாறிக்கொள்ளலாம். இவ்வாறு மாற்றிக் கொண்டால் சரியாக இருக்கும். அல்லது 2022-ல் நடக்கும் உலக கோப்பை தொடரை சேர்த்து ஆஸ்திரேலியாவை நடத்தலாம் என்ற மூன்று வாய்ப்புகள்தான் இருக்கிறது

மேலும் ஐசிசி கூட்டத்தில் மூன்று விஷயங்கள் பற்றி தெளிவாக தெரியும். உலக கோப்பை தொடர் குறித்த முடிவு, ஐசிசியின் புதிய சேர்மன் குறித்த முடிவு மற்றும் ஐசிசியின் புதிய சேர்மன் தேர்தல் தேதி ஆகியவை தெரிய வரும் என்று தெரிகிறது. எப்படி இருந்தாலும் இந்த வரும் ஐபிஎல் தொடர் நடத்துவதில் உலக கிரிக்கெட் வாரியங்கள் முனைப்பு காட்டி வருகிறது தெளிவாக தெரிகிறது.

Advertisement