டெஸ்ட் போட்டி இனிமேல் 5 நாட்கள் கிடையாது. நாட்களை குறைத்து ஐ.சி.சி அதிரடி – விவரம் இதோ

Dharmasena
- Advertisement -

உலக அளவில் தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 9 நாட்டு அணிகளும் தங்களது தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தற்போது வரை இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் அதிக புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. முதன்முறையாக ஐ.சி.சி இந்தத்தொடரினை நடத்தி வருகிறது.

Ind

- Advertisement -

இந்தத் தொடர் அடுத்த 2021 ஆம் ஆண்டு வரை நடைபெறும். இந்த புள்ளி பட்டியலில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் டாப் 2 அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும். இந்நிலையில் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முடிந்த பிறகு அடுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் 2023 ஆம் ஆண்டு தொடங்க உள்ளது.

அதன்படி அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பல மாற்றங்களைக் கொண்டுவர ஐசிசி முடிவு செய்துள்ளது. அதன்படி ஐந்து நாட்கள் வரையறை கொண்ட டெஸ்ட் போட்டிகளை இனி நான்கு நாட்களாக குறைக்க முடிவு செய்துள்ளது. ஏனெனில் டெஸ்ட் போட்டிகளின் சுவாரஸ்யம் குறையாமல் இருக்கவும் மேலும் இந்த நாட்களை குறைத்தால் மேலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை அதிகமாக நடத்தலாம் என்றும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அது தவிர நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டியை நடத்தினால் ஒரு டெஸ்ட் போட்டியை அந்த தொடரில் அதிகமாகவும் நடத்த வாய்ப்புள்ளது இது தவிர மற்றொரு சிறப்பம்சமாக ஒரு நாளில் வழக்கமாக வீசப்படும் 90 ஓவர்களை அதிகரித்து 98 ஓவர்களாக மாற்றினால் நான்கு நாட்களிலேயே ஐந்து நாட்களுக்கான போட்டியை நடத்த முடியும் என்பதாலும் இந்த மாற்றத்தை ஐசிசி கொண்டுவர உள்ளதாம். இருப்பினும் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முடிந்த பின்னரே இது குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement