அப்பாடா முடிவுக்கு வந்த பவுண்டரி விதிமுறை. ஒருவழியாக விதியை மாற்ற முன்வந்த – ஐ.சி.சி

Dharmasena
- Advertisement -

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டி சமனில் முடிந்தால் சூப்பர் ஓவர் மூலம் வெற்றியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் சூப்பர் ஓவரும் சமனில் முடிந்ததால் அதிக பவுண்டரி அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது.

England

- Advertisement -

உலககோப்பை தொடர் முடிந்தாலும் அந்த விதி ஏற்படுத்திய சர்ச்சை முடிந்த பாடில்லை. அந்த சர்ச்சைக்குள்ளான விதி பற்றி இன்னும் விவாதம் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. பல முன்னாள் வீரர்களும் அந்த விதி குறித்தும் பல கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் ஐசிசி இதுபற்றி விவாதிக்க முடிவு செய்துள்ளது.

அதன்படி அனில் கும்ளே தலைமையிலான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இது பற்றி விவாதிக்கும் என்று ஐசிசியின் மேனேஜர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் விடயம் யாதெனில் போட்டி சமனில் முடிந்தால் சூப்பர் ஓவர் மூலம் வெற்றியை தீர்மானிக்கும் முறை கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ளது.

England

ஆனால் சூப்பர் அவரும் சமனில் முடிந்தால் பவுண்டரியை வைத்து வெற்றியை அறிவிக்கும் முறையை மாற்றி வேறு ஏதாவது முறையை இந்த கூட்டத்தில் கலந்துரையாடி முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. இதனால் பல புது விதிமுறைகளில் icc அறிவிக்கும் வாய்ப்பு உள்ளது என்று ஐசிசியின் மேனேஜர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement