டைம் வேஸ்ட் பண்ணா 5 ரன்ஸ் பெனால்டி. நாளைய போட்டியிலிருந்து நடைமுறைக்கு வரும் – ஐ.சி.சி-யின் புதிய ரூல்ஸ்

ICC
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அனைத்து கிரிக்கெட் விளையாடும் நாடுகளையும் ஒருங்கிணைத்து சரியான முறையில் போட்டிகளை நடத்தி வருவதோடு அவ்வப்போது அனைத்து அணிகளுக்கும் இடையே மூன்று வகையான சாம்பியன்ஷிப் தொடர்களையும் நடத்தி ரசிகர்களை பரவசப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட் உலகை துடிப்பாக வைத்திருக்க அவர்கள் அவ்வப்போது சில விதிமுறைகளையும் அறிமுகப்படுத்தி சுவாரசியத்தை கூட்டி வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே மூன்று விதமான கிரிக்கெட்டிலும் பல்வேறு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது கூடுதலாக ஒரு புதிய விதிமுறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ள ஐசிசி அதனை நாளை நடைபெறவுள்ள போட்டியில் பரிசோதிக்கவும் இருக்கிறது. அந்த வகையில் ஐசிசி வெளியிட்டுள்ள புதிய விதிமுறை யாதெனில் :

ஒரு பவுலர் ஒரு ஓவரை முழுவதுமாக வீசி முடித்த பின்னர் அடுத்த ஓவரை வீச வரும் அடுத்த பவுலர் 60 வினாடிகளுக்குள் அதாவது ஒரு நிமிடத்திற்குள் அடுத்த ஓவரின் முதல் பந்தை வீசி விட வேண்டும். அப்படி 60 வினாடிகளுக்குள் அடுத்த ஓவர் துவங்கவில்லை என்றால் அம்பயர்கள் இரண்டு முறை எச்சரிக்கை கொடுப்பார்கள்.

- Advertisement -

பின்னர் மூன்றாவது முறையாகவும் பந்துவீசும் அணி 60 வினாடிகளுக்குள் அடுத்த ஓவரை வீசவில்லை என்றால் பேட்டிங் செய்யும் அணிக்கு ஐந்து ரன்கள் போனஸாக வழங்கப்படும் என்று ஐசிசி இந்த புதிய விதிமுறையை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : இந்தியாவில் நடந்த அதே பிரச்சனை.. பயிற்சி போட்டியிலேயே இப்படியா பண்ணுவீங்க.. ஆஸி வாரியத்தை விளாசிய ஹபீஸ்

இதன் காரணமாக போட்டியின் தேவையற்ற நேரம் குறைந்து சரியான நேரத்தில் போட்டி முடியும் என்பதனாலேயே இந்த விதிமுறையை அவர்கள் கொண்டுவந்துள்ளனர். இந்த புதிய விதிமுறையானது நாளை இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையே நடைபெற இருக்கும் முதலாவது டி20 போட்டியில் இருந்து அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement