உலகக்கோப்பை முடிந்து வெளியிடப்பட்ட புதிய தரவரிசை பட்டியல் – முதலிடத்தில் உள்ள வீரர்களின் விவரம் இதோ

Bumrah

நடப்பு உலகக் கோப்பை தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவு பெற்றது. இந்த தொடரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

England

இதனையடுத்து தற்போது ஐசிசி புதிய ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி அணிகள் தரவரிசையில் அணிகள் அடிப்படையில் இங்கிலாந்து அணி 125 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்து இந்திய அணி 122 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

- Advertisement -

அடுத்தடுத்து மூன்று மற்றும் நான்காம் இடத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இருக்கின்றன. கடைசியாக பத்தாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியும் இடம் வகிக்கின்றன. பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் விராட் கோலி 891 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ரோகித் சர்மா சர்மா 885 புள்ளிகள் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

Bumrah

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா 814 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஆல்ரவுண்டர் தரவரிசையில் சாகிப் அல் ஹசன் முதலிடத்தில் உள்ளார்.

- Advertisement -
Advertisement