கொரோனா எதிரொலி : ஐ.சி.சி அவசர மீட்டிங். கிரிக்கெட் போட்டிகளின் நிலை இதுதான் – அதிகாரபூர்வ அறிவிப்பு

icc
- Advertisement -

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் அதன் மூலம் ஏற்படப்போகும் நஷ்டம் ஆகியவை குறித்து தற்போது ஐசிசி விவாதிக்க தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு சர்வதேச தொடர்களும் விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

corona

இந்நிலையில் ஐசிசி தனது உறுப்பு நாடுகளை வைத்து காணொளி காட்சி மூலம் இதன் தாக்கங்கள் குறித்து விவாதித்தது. இந்தியா சார்பில் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி பங்கேற்றார். இது குறித்து பேசிய ஐசிசி தலைமை நிர்வாகி கூறியதாவது :

- Advertisement -

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் நடைபெறவிருந்த இரு தரப்பு தொடர்கள் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல தொடர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தும் கிட்டத்தட்ட ரத்தாகும் அபாயத்தில் உள்ளன. ஏனெனில் தள்ளி வைக்கப்பட்டால் அந்த குறிப்பிட்ட காலத்தில் நடக்க வேண்டிய தொடர்கள் பாதிக்கப்படும்.

Ganguly

இதன் காரணமாக ரத்து செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்றே தெரிகிறது. இதன் தாக்கம் குறித்து இந்த கூட்டத்தில் முழுவதும் விவாதிக்கப்பட்டது. அதனை தாண்டி இவ்வாறு ரத்து செய்யப்பட்டால் அதன் மூலம் ஏற்படும் வர்த்தக இழப்புகளை எவ்வாறு சரிசெய்வது? எவ்வாறு திட்டமிடுவது? என அனைத்து தாக்கம் குறித்தும் ஐசிசி உறுப்பினர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

- Advertisement -

மேலும் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்றினால் என்ன நடக்கும் என்பது குறித்தும் விவாதித்தோம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆட்டங்களை ரத்து செய்தால் அதன் மூலம் புள்ளிகளை எவ்வாறு பகிர்ந்தளிப்பது? இதற்கு உரிய தீர்வு காணாவிட்டால் பல சிக்கல்கள் நேரிடும் எனவும் விவாதித்தோம்.

Ganguly

மேலும், ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடருக்கு எந்த சிக்கலும் இல்லை என்றே தெரிகிறது. ஜூன் மாதம் இந்த பிரச்சனை முடிந்து விட்டால் மீண்டும் போட்டிகள் நடத்தலாம் என்றும் விவாதிக்கப்பட்டது என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement