டி20 ல இனி டிரா ஆனா சூப்பர் ஓவரில் புதிய விதிமுறைகள். இனி இந்த முடிவுதானாம் – ஐ.சி.சி அதிரடி அறிவிப்பு

Umpire
- Advertisement -

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போது சமனில் முடிந்தது. மேலும் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. அந்த ஓவரில் போட்டி சமன் ஆனதால் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஐசிசி விதிகள் விதிகள் மீது கடுமையான விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியிலும் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியிலும் எழுந்தன.

Williamson

- Advertisement -

எனவே இந்த விதிமுறைகளை மாற்ற முடிவு செய்து அதற்கான பரிசீலனையில் ஏற்கனவே ஐ.சி.சி ஈடுபட்டு வந்தது. அதன்படி முதற்கட்டமாக டி20 போட்டிகளில் புதிய விதிகளை ஐசிசி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க – ஆஸ்திரேலிய தொடர்களில் அறிமுகப்படுத்த உள்ளது.

அதன்படி புதிய விதிமுறை ஆக டி20 கிரிக்கெட் போட்டி டையில் முடிந்தால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்படும். அந்த சூப்பர் ஓவரும் டையில் முடிந்தால் முடிவு கிடைக்கும் வரை தொடர்ந்து சூப்பர் ஓவர் வீசப்படும். சூப்பர் ஓவரில் 2 விக்கெட்டுகள் விழுந்தால் அணி இன்னிங்ஸ் முடிந்துவிடும் அதேபோல சூப்பர் ஓவரில் ஒவ்வொரு அணிக்கும் தலா ஒரு ரிவியூவும் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

IND-3

அதேபோன்று ஆட்டம் டிரா ஆன பிறகு சூப்பர் ஓவர் நடைபெறும் போது மழை பெய்தால் நீண்டநேரம் போட்டி நடத்த முடியாத வாய்ப்பு இருப்பின் போட்டி கைவிடப்படும். மேலும் போட்டியில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணியை சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்யும் அதே போன்று கடைசி ஓவரில் பீல்டர்கள் கட்டுப்பாடு எவ்வாறு இருந்ததோ அதே போன்றுதான் சூப்பர் ஓவரிலும் பீல்டர்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement