அம்பயர்களால் ஏற்படும் தொல்லை இனி இல்லை. ஐ.சி.சி போட்டுள்ள புதிய ரூல்ஸ் – விவரம் இதோ

Umpire
- Advertisement -

பந்துவீச்சாளர்கள் நோபால் வீசுவது சகஜம்தான். ஒரு ஒருநாள் போட்டியில் கிட்டத்தட்ட ஒவ்வொரு பந்து வீச்சாளரும் 60 பந்துகள் வீசுவார்கள். இதில் எப்படியும் ஒன்று அல்லது இரண்டு நோபால் வீசி விடுவார்கள். மொத்தம் ஒரு போட்டியில் பார்த்துக்கொண்டால் அதிகபட்சமாக 10 நோபால்கள் இருக்கும்.

bumrah 2

- Advertisement -

இவற்றையெல்லாம் களத்தில் இருக்கும் கள நடுவர்கள் தான் சரியாக பார்த்து தீர்ப்பு கொடுக்க வேண்டும். ஆனால், இந்த காலகட்டத்தில் உள்ள நடுவர்கள் அதனை கூட கவனிக்காமல் பலமுறை தவறான தீர்ப்பினை கொடுத்திருக்கிறார்கள். இந்த தவறான முடிவின் காரணமாக ஒரு உலக கோப்பையே தவறான அணிக்கு சென்று சேர்ந்து உள்ளதை கூட சமீபத்தில் பார்த்தோம்.

சமீபத்தில்கூட இலங்கையின் குமார தர்மசேனா என்ற நடுவர் 4 ரன்களுக்குப் பதிலாக 5 ரன்கள் என்று கொடுக்க இங்கிலாந்து அணி உலக கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இனிமேல் பந்துவீச்சாளர்கள் வீசும் நோபால்களை பார்க்க, கணிக்க மூன்றாவது நடுவர் பயன்படுத்தப்படுவார் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

Umpire

பெவிலியனில் உட்கார்ந்திருக்கும் மூன்றாவது நடுவர் கேமரா மூலம் பார்த்து உடனடியாக களத்தில் இருக்கும் நடுவருக்கு செய்தியை சொல்வார். அவர் உடனடியாக ஆடுகளத்தில் நோபால் என்று அறிவிப்பார். இந்த விதி ஏற்கனவே அமல் படுத்தப் பட்டுவிட்டது.

Umpire

இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் முதல் நடக்கும் தொடரில் எல்லாம் இனி மூன்றாவது நடுவர் தான் இதனை கவனித்து தீர்ப்பளிப்பார் என்று ஐசிசி அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் மூலம் அம்பயர் செய்யும் தவறுகள் ஓரளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement