முதன்மை கிரிக்கெட் போட்டிகளில் ஐசிசி 10 புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது.
1. ஒருநாள், டி20 போல இனிமேல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஒரு அணி 60 நொடிகளுக்குள் அடுத்த ஓவரை வீசத் துவங்க வேண்டும். அதை கண்காணிக்க நடுவர்கள் ஸ்டாப் க்ளாக் எனப்படும் நிறுத்து கடிகாரத்தை வைத்திருப்பார்கள். ஒருவேளை 60 நொடிகளை தாண்டினால் நடுவர்கள் 2 முறை எச்சரிக்கைக் கொடுப்பார்கள்.
அதையும் தாண்டி தாமதம் செய்தால் 5 ரன்கள் பெனால்டி வழங்கப்படும். இந்த விதிமுறை ஒவ்வொரு 80 ஓவர்களுக்கு ஒரு முறை புதிதாக கணக்கிடப்படும்.
2. தற்சமயத்தில் பந்தின் மீது சலிவா பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பந்தின் மீது சலிவா பயன்படுத்தப்பட்டது அறியப்பட்டால் அதை மாற்ற வேண்டும் என்ற கட்டாயமில்லை.
புதிய விதிமுறைகள்:
பந்தை மாற்ற வேண்டும் என்பதற்காக சில அணிகள் வேண்டுமென்றே சலிவா பயன்படுத்துவதை தடுக்க இந்த விதிமுறை கொண்டு வரப்படுகிறது. அந்த அணிகளுக்கு 5 ரன்கள் பெனால்டி வழங்கப்படும். இனிமேல் சலிவா பயன்படுத்தப்பட்டாலும் பந்தின் தன்மை மாறாத வரை நடுவர்கள் பந்தை மாற்ற மாட்டார்கள்.
3. கேட்ச் ரிவியூ சோதிக்கப்படும் போது அவுட்டில்லை என்று தெரிய வந்தால் நடுவர் அடுத்ததாக எல்பிடபிள்யூ முறையையும் சோதிப்பார்.
அப்போது கேட்ச் ரிவியூக்கு களத்தில் இருந்த நடுவர் வழங்கிய தீர்ப்பு முதன்மை தீர்ப்பாக எடுத்துக் கொள்ளப்படும்.
4. சில நேரங்களில் ஃபீல்டர்கள் தெளிவான கேட்ச் பிடிக்காமல் வேண்டுமென்றே விக்கெட்டை கேட்பார்கள். அது போன்ற சூழ்நிலையில் கேட்ச் தெளிவாக இல்லையென்று கண்டறிந்தால் நடுவர் அதை நோ-பால் என்று அறிவிப்பார்.
5. ஒரே பந்தில் நடுவரும் வீரரும் எல்பிடபிள்யூ, ரன் அவுட் போன்ற 2 விதமான ரிவியூ எடுக்கலாம்.
ஐசிசி அறிவிப்பு:
ஒரு பந்தில் ஒரு பேட்ஸ்மேன் எல்பிடபிள்யூ மற்றும் ரன் அவுட்டாகிறார் என்றால் அந்த இரண்டையும் தனியாக ரிவ்யூ எடுக்கலாம். ஆனால் முதலில் எல்பிடபிள்யூ என்று தெரிய வந்தால் அது டெட் பால் என்று முடிவெடுக்கப்பட்டு விக்கெட் வழங்கப்படும். ரன் அவுட் சோதிக்கப்பட மாட்டாது.
6. இதற்கு முன் கேட்ச்சை சோதிக்கும் போது நோ-பால் என்று தெரிந்தால் நடுவர்கள் அத்தோடு அனைத்தையும் முடித்து விடுவார்கள்.
இனிமேல் நோ-பால் என்றாலும் கேட்ச் சோதிக்கப்படும். அது தெளிவாக இருக்கும் பட்சத்தில் நோ-பால் போட்டதற்கான எக்ஸ்ட்ரா ரன் வழங்கப்படும். இல்லையேல் அந்தப் பந்தில் பேட்ஸ்மேன் எடுத்த ரன் வழங்கப்படும்.
7. சில நேரங்களில் பேட்ஸ்மேன்கள் எக்ஸ்ட்ரா ரன்கள் எடுப்பதற்காக வேண்டுமென்றே முதல் ரன்னை வெள்ளைக்கோட்டை தொடாமல் வேகமாக ஓடி எடுப்பார்கள்.
ஒரு பந்து மட்டுமே:
இனிமேல் அது போன்ற சூழ்நிலையில் எதிரணி கேப்டன் எந்த பேட்ஸ்மேன் அடுத்த பந்தை எதிர்கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கலாம். அத்துடன் முழுமையாக ரன் எடுக்காத பேட்ஸ்மேன் அணிக்கு 5 ரன் பெனால்டி வழங்கப்படும்.
8. உள்ளூர் போட்டிகளில் ஒரு வீரர் முழுமையாக காயத்தை சந்திக்கும் போது புதிதாக வரும் மாற்று வீரர் பேட்டிங், பவுலிங் உள்ளிட்ட அனைத்தையும் செய்யலாம். அதை நடுவர் சோதித்து முடிவெடுப்பார்.
இதையும் படிங்க: இப்படி யூஸ் பண்ண தெரியாம தாக்கூரை வேஸ்ட்ன்னு சொல்லாதீங்க.. சுப்மன் கில்லுக்கு ரஹானே அட்வைஸ்
9. 2025 ஜூலை 2 முதல் ஒருநாள் போட்டிகளில் 35வது ஓவர் முதல் 2க்கு பதிலாக ஒரு பந்து மட்டுமே பயன்படுத்தப்படும். இந்த மாற்றம் ரிவர்ஸ் ஸ்விங் பெறுவதற்காகவும் ஸ்பின்னர்களுக்கு உதவுவதற்காகவும் கொண்டு வரப்படுகிறது.
10. இது போக பவுண்டரி எல்லையைத் தாண்டி காற்றில் கேட்ச் பிடிக்கும் போது தரையில் ஒருமுறை மட்டுமே காலை தொடலாம். 2 முறை தொட்டால் கேட்ச் வழங்கப்படாது.



