இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சர்துள் தாகூர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று சுனில் காவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர்.
ஏனெனில் முதல் போட்டியில் பேட்டிங், பௌலிங் ஆகிய 2 துறைகளிலும் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் மட்டும் அவர் 2 விக்கெட்டுகள் எடுத்தது வெற்றிக்கு எந்த உதவியும் செய்யவில்லை. இந்நிலையில் தாகூரின் திறமையை அறிந்து பயன்படுத்தத் தெரியாமல் அணியிலிருந்து கழற்றி விட நினைப்பது சரியற்றது என்று அஜிங்க்ய ரஹானே தெரிவித்துள்ளார்.
யூஸ் பண்ண தெரியாம:
2021 காபா டெஸ்ட் போட்டியில் ரஹானே தலைமையில் அறிமுகமான தாக்கூர் இந்தியாவின் சரித்திர வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அத்துடன் அவருடைய தலைமையில் மும்பை அணி 2023/24 ரஞ்சிக் கோப்பையை வெல்வதற்கும் தாக்கூர் கருப்பு குதிரையாக செயல்பட்டார். எனவே அவரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி சுப்மன் கில்லுக்கு சமீபத்திய பேட்டியில் ரகானே கொடுத்த அறிவுரை பின்வருமாறு.
“ஆல் ரவுண்டர்களின் வேலை மிகவும் முக்கியம் என்று நான் கருதுகிறேன். நல்ல அனுபவத்தைக் கொண்டுள்ள சர்துள் தாக்கூர் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார். அவர் அதிக ஓவர்கள் வீசுவதை நான் விரும்புகிறேன். அவரை இந்திய அணி நல்ல முறையில் பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும்”
கழற்றி விடாதீங்க:
“நான் பார்த்த வரையில் அவரால் பந்தை 2 பக்கமும் ஸ்விங் செய்ய முடியும். அவர் விக்கெட் டேக்கிங் பவுலர். தாக்கூரிடம் முதல் மாற்றம் அல்லது புதிய பந்தை கொடுத்து பௌலிங் செய்யச் சொன்னால் கூட அவர் 2 புறமும் பந்தை ஸ்விங் செய்வார். பொதுவாக டுக் பந்துகள் 10 – 12 ஒவ்வொருவருக்கு பின்பு தான் தாக்கத்தை ஏற்படுத்தத் துவங்கும்”
இதையும் படிங்க: இவ்ளோ அனுபவம் இருக்குற ரவீந்திர ஜடேஜா ஏன் இப்படி பண்ணாருன்னு புரியல – சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து
“பும்ராவுடன் சேர்ந்து தாக்கூர் பந்து வீச்சை துவக்க வேண்டும். சிராஜ் முதல் மாற்றமாக பவுலிங் செய்வது சிறப்பாக இருக்கும். தாக்கூர் நிறைய ஓவர்கள் பவுலிங் செய்வதை நான் பார்க்க விரும்புகிறேன். அவருக்கு நிறைய சுதந்திரத்தை கொடுத்தால் அதிகமான விக்கெட்டுகளை எடுத்துக் கொடுப்பார்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி ஜூலை இரண்டாம் தேதி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



