இனி அம்பயர்கள் தேவையில்லை. இங்கிலாந்து – பாகிஸ்தான் தொடரில் அறிமுகமாகிய புதிய விதிமுறை – விவரம் இதோ

Dharmasena

இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமின்றி ஒரு நாள் மற்றும் டி20 என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் பலமுறை பவுலர்கள் கிரீசை தாண்டி நோபால் பந்தினை வீசும்போது அம்பயர்கள் பார்க்காமல் விட்டுள்ளனர். அமபயர்களின் கவனக்குறைவினால் பல பேட்ஸ்மேன்கள் அநியாயமாக ஆட்டமிழந்தது வெளியேறியுள்ளனர்.

pak

அதுமட்டுமின்றி அப்படி அம்பயர்கள் கவனிக்காமல் விடும் பந்துகளால் போட்டியின் முடிவுகளே மாறி உள்ளதை நாம் கண்டுள்ளோம். மேலும் அம்பயர்கள் பவுலர்கள் நோபால் வீசும் பந்தினை கவனிக்காமல் விடுவதின் மூலம் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில் இத்தகைய அநீதியை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தற்போது ஐசிசி புதிய விதி முறை ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்த புதிய விதிமுறை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இனி களத்தில் இருக்கும் அம்பயர் தவிர டிவி முன் அமர்ந்திருக்கும் நடுவரும் நோபால் அளிக்கும் முறை அறிமுகமாகியுள்ளது. அதாவது களத்தில் இருக்கும் அம்பயர் நோபால் பந்தினை கவனிக்காமல் இருப்பின் அதனை மூன்றாவது நடுவர் கவனித்து அவர் நோபால் என்று அறிவிக்கலாம்.

umpire

இந்த புதிய விதிமுறையை நன்றாக இருக்குமாயின் இனி வரும் அனைத்து போட்டிகளிலும் இது பயன்படுத்தபபடும் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே அம்பயர்களின் அதிகாரம் கொஞ்சம் கொஞ்சமாக போய் வரும் நிலையில் தற்போது நோபாலையம் கவனிக்க அவர்களிடமிருந்து பிரித்து மூன்றாவது அம்பயருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Umpire

இதன் மூலம் இனி தெளிவான முடிவுகள் கிடைக்கும் என்று உறுதியாக நம்பப்படுகிறது இந்தப் போட்டிகளில் கிடைக்கும் தீர்ப்புகளை வைத்து இதனை எதிர்காலத்திலும் தொடர வைக்க ஐசிசி முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.