இன்றைய இந்தியா வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் ஐ.சி.சி கொண்டுவரவுள்ள புதிய ரூல்ஸ் – விவரம் இதோ

ICC

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இந்திய அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதலாவது டி20 போட்டி டிசம்பர் 6 ஆம் தேதி (இன்று) ஐதராபாத்தில் இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது.

IND

இன்று துவங்க உள்ள இந்த போட்டியில் நோபால்களை அம்பயர்கள் கவனிக்கத் தவறும் பட்சத்தில் தனியாக ஒரு டிவி அம்பயர் நோபால்களை கவனிப்பார். இந்த நோபால்களை கவனிக்கும் அம்பயர் விதிமுறை இந்த போட்டியிலிருந்து அமல்படுத்த உள்ளது ஐ.சி.சி

ஏற்கனவே நோபால்கள் மூலம் வந்த பிரச்சனையால் ஐசிசி இந்த விதியை அதிகாரபூர்வமாக அறிவித்த இந்நிலையில் தற்போது இந்தியா வெஸ்ட் இண்டீஸ் எதிரான தொடரில் முதல் முறையாக பரிசோதிக்கவும் உள்ளது. அதனால் இந்த போட்டியில் இருந்து நோபால் அம்பயர் முறையை தொடரவும் ஐ.சி.சி திட்டமிட்டுள்ளது.

Dharmasena

இந்த முயற்சியின் மூலம் 3வது அம்பயர் நோபல் கவனிப்பார் என்றும் அப்படி அவரின் கவனத்திற்கு பவுலர் வீசியது நோபால் என தெரிய வந்தால் உடனடியாக களத்தில் இருக்கும் அம்பயரை தொடர்பு கொண்டு நோபால் என்று அறிவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கவனக்குறைவால் ஏற்படும் விக்கெட் முடிவுகள் சரியாக கிடைக்கும் என்றும் தேவையற்ற சர்ச்சைக்கள் தவிர்க்கப்படும் என்றும் நம்பலாம்

- Advertisement -