2023 உலக கோப்பை : ரசிகர்கள் மழையில் நனையனும், மைதான பராமரிப்பாளர்களுக்கு ஐசிசி அதிரடி உத்தரவு – விவரம் இதோ

World Cup Pitch
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிப்பதற்காக ஐசிசி நடத்தும் 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாலமாக துவங்கி நவம்பர் 19 வரை நடைபெறுகிறது. 1987, 1996, 2011 ஆகிய வருடங்களைப் போல் அல்லாமல் முதல் முறையாக முழுவதுமாக இந்தியாவில் மட்டுமே நடைபெறும் இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வெற்றிகரமான ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் மொத்தம் 48 போட்டிகளில் மோத உள்ளன. அந்த அணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் வலுவான நிலையாக திகழும் இந்தியா 2011 போல கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

- Advertisement -

மேலும் 2013க்குப்பின் தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தியாவது ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா நிறுத்தி சரித்திரம் படைக்குமா என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அப்படி வரலாற்றில் முழுவதுமாக தங்களுடைய நாட்டில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்துவதற்கு பணக்கார வாரியமாக போற்றப்படும் பிசிசிஐ பல கோடிகளை செலவு செய்து மைதானங்களை புதுப்பிக்கும் வேலைகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பே துவங்கியது.

ரசிகர்கள் நனையனும்:
குறிப்பாக உலக ரசிகர்களை கவரும் வகையில் மைதானத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் வண்ணமயமான மின்விளக்குகளை பொருத்துவதற்காக மாநில வாரியங்களுக்கு தேவையான உதவிகளை பிசிசிஐ செய்தது. இந்நிலைமையில் மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, சென்னை, லக்னோ, தரம்சாலா, புனே மற்றும் ஹைதராபாத் ஆகிய 10 நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையில் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக ஓரளவு பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்ச் அமைக்குமாறு மைதான பராமரிப்பாளர்களுக்கு ஐசிசி உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

குறிப்பாக பிட்ச் ஆலோசகர் ஆண்டி அட்கின்சன் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை மைதானங்கள் பராமரிப்பாளர்கள் கூட்டத்தில் யார் சொன்னாலும் பிட்ச்சில் இருக்கும் பச்சை புற்களை நீக்கக்கூடாது என்று அறிவுறுத்தியதாக வைக்கப்பட்டுள்ளது. அதில் பங்கேற்ற ஒரு மைதான பராமரிப்பாளர் கூறியது பின்வருமாறு. “எங்களுக்கு 60 – 40% என்ற சதவீதத்தில் பேட்டிங்க்கு சாதகமான பிட்ச் அமைக்குமாறு ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

- Advertisement -

முன்னதாக 2011, 2015, 2019 உலகக் கோப்பைகளில் முறையே 249, 275, 276 என்பது ஒரு போட்டியின் சராசரி ஸ்கோராக இருந்தது. அந்த நிலையில் தற்போதைய அறிவுறுத்தலின்படி இந்த உலகக் கோப்பையில் ஒரு போட்டியின் சராசரி ஸ்கோர் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அந்த கூட்டத்தில் மைதானத்தின் பவுண்டரி அளவுகள் 70 மற்றும் 80 யார்ட்ஸ் தொலைவில் இருந்தால் போதும் என்றும் கூறப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. மேலும் மழை பெய்தால் மொத்த மைதானத்தை மூடும் அளவுக்கு தார்பாய்களை நேராக வைத்திருக்க ஐசிசி கேட்டு கொண்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அஷ்வினுக்கு இடமிருக்கு, தனது அட்டகாசமான 2023 உ.கோ 15 பேர் இந்திய அணியை வெளியிட்ட எம்எஸ்கே பிரசாத் – விவரம் இதோ

மொத்தத்தில் இந்தியா மட்டுமில்லாமல் உலக ரசிகர்களை ரன் மழையில் நனைய வைப்பதற்காக ஐசிசி இந்த முடிவை என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் பொதுவாகவே மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்தியாவின் கோடைகாலத்தில் நடைபெறும் உலகக் கோப்பை இம்முறை அக்டோபர், நவம்பர் ஆகிய மழைக்காலத்தில் நடைபெற உள்ளது. எனவே உண்மையாகவே ரன் மழையில் ரசிகர்கள் நனைகிறார்களா அல்லது வருணபகவான் மழையில் நனைகிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement