2020 மற்றும் 2021 இரண்டு ஆண்டுகளிலும் அடுத்தடுத்து டி20 உலகக்கோப்பை நடத்த ஐ.சி.சி திட்டம் – காரணம் இதுதான்

Cup
- Advertisement -

இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்து முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டி மழையால் துவக்கத்தில் பாதிக்கப்பட்டாலும் இறுதியில் சுவாரசியமாக முடிவடைந்தது. இதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளும் டி20 உலகக்கோப்பையை நடத்த ஐ.சி.சி திட்டமிட்டுள்ளது.

worldcup 1

- Advertisement -

அடுத்த ஆண்டு 2020 ஆஸ்திரேலிய நாட்டில் டி20 தொடர் நடைபெற உள்ளது. அந்த ஐசிசி தொடருக்கு பின்னர் அடுத்த ஆண்டே மேலும் ஒரு டி20 உலகக் கோப்பையை இந்தியாவில் நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது. மேலும் அஅதற்கான காரணத்தையும் தற்போது தெரிவித்துள்ளது ஐசிசி நிர்வாகம்.

அதுகுறித்து ஐ.சி.சி நிர்வாகம் தெரிவித்ததாவது 2020ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை நடைபெற்ற பிறகு அடுத்த ஆண்டு இந்தியாவில் டி20 உலகக்கோப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன் காரணம் சாம்பியன்ஸ் டிராபி தொடரை ரத்து செய்துள்ளதால் அதற்கு பதிலாக எட்டு அணிகள் பங்குபெறும் போட்டியை 16 அணிகளாக அதிகரித்து டி20 உலகக்கோப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம் .

worldcup

எனவே எங்களது திட்டத்தின்படி அடுத்தடுத்த ஆண்டுகளில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெறும் என்றும் இதற்கு முன்னதாக 2009, 2010ஆம் ஆண்டு இதுபோன்று அடுத்தடுத்த ஆண்டுகளில் டி20 உலக கோப்பை தொடர் நடந்தது என்பதையும் ஐசிசி நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Advertisement