ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஐ.சி.சி – ரசிகர்கள் மகிழ்ச்சி

Cup
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு வரும் அக்டோபர் 18ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை ஐ.சி.சி சர்வதேச டி20 ஓவர் உலக கோப்பை தொடர் நடக்க உள்ளது. தொடருக்கான அறிவிப்பு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமின்றி அந்த தொடருக்கான போட்டி அட்டவணையும் ஐ.சி.சி ஏற்கனவே வெளியிட்டிருந்தது.

- Advertisement -

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக அளவில் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பல விளையாட்டு தொடர்கள் ரத்தும் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த வருடம் நடக்கவிருக்கும் 20 ஓவர் உலக கோப்பை தொடர் நடக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆறு மாதங்களுக்கு விமானப் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது .இப்படி இருக்கையில் எப்படி டி20 உலக கோப்பை தொடர் நடைபெறும் என்பது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. மேலும் நிலைமை கட்டுக்குள் வந்தாலும் மற்ற நாட்டு கிரிக்கெட் நிர்வாகங்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பது தெரியவில்லை.

Ind vs Aus

ஆனால் இந்த உலக கோப்பை தொடர் துவங்க இன்னும் ஆறு மாதங்கள் கால அவகாசம் இருக்கிறது. அதனை தொடர்ந்து தற்போது ஐ.சி.சி வெளியிட்ட தகவலின் படி இந்த தொடரை ரத்து செய்வதோ அல்லது தள்ளி வைப்பதோ குறித்து இன்னும் ஆலோசனை செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார் அசிசியின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதன்காரணமாக இந்த உலகக்கோப்பை தொடர் திட்டமிட்டபடி நடைபெற அதிக வாய்ப்புள்ளது. மேலும் உலககோப்பைக்கு இன்னும் 6 மாதங்கள் இருப்பதால் அதற்குள் ஐ.சி.சி நிலைக்கு ஏற்றாற்போல் இந்த தொடரின் அட்டவணையை மாற்றவும் நல்ல வாய்ப்பு இருக்கிறது.

fans 2

இதன் காரணமாக தற்போது உலகக்கோப்பை நடக்க சிறிய அறிகுறி தென்பட்டுள்ளதால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது நல்ல செய்தியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement