இனிவரும் கிரிக்கெட் போட்டிகளில் இந்த புதிய விதிமுறைகள் அனைத்தும் கடைபிடிக்க வேண்டும் – ஐ.சி.சி அதிகாரபூர்வ அறிவிப்பு

ICC
- Advertisement -

கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து பின்னர் வீரர்கள் பயிற்சியின் போதும் கிரிக்கெட் போட்டியின் போதும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை ஐசிசி தற்போது வெளியிட்டுள்ளது. கிரிக்கெட் போட்டியில் போட்டிகள் இன்னும் சில மாதங்களில் மீண்டும் துவங்க இருக்கிறது. ரசிகர்கள் இல்லாமலோ அல்லது ரசிகர்களை வைத்து எப்படியும் ஆகஸ்ட் மாதத்தில் முதல் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.

Practice

- Advertisement -

அந்த வேலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி ஐ.சி.சி கூறியுள்ள வழிமுறைகள் இதோ :

1) வைரஸ் தொற்று பரவாமல் இருக்க போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் தொடருக்கு முன்பு முன்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் பயிற்சியில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். அந்த நேரத்தில் அவர்களது உடல்நிலை கண்காணிக்கப்படும்.

2) ஒவ்வொரு அணியிலும் ஒரு தலைமை மருத்துவ நிபுணர் மற்றும் உயிர் பாதுகாக்கும் நிபுணர் இருக்கவேண்டும் .இந்த இருவரும் அரசு அறிவிக்கும் நடைமுறைகளையும் பயிற்சி மற்றும் போட்டியை தொடங்குவதற்கான பாதுகாப்பு வேலைகளையும் செய்யக் கடமைப்பட்டவர்கள் ஆவர்.

- Advertisement -

3) பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியே சென்று ஓய்வெடுக்க அனுமதி கிடையாது.

4) இனிமேல் வீரர்கள் தங்களது தொப்பிகள், துண்டுகள் மற்றும் தங்களது பொருட்கள் சன் கிளாஸ் ஆகியவற்றை களத்தில் இருக்கும் நடுவரிடமோ அல்லது சக வீரர்களிடம் யாரிடமுமோ கொடுக்க அனுமதி கிடையாது.

- Advertisement -

Umpire

5) வீரர்கள் மற்றும் நடுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போது சமூக இடைவெளியை பின்பற்றி இருக்க வேண்டும். இதன் காரணமாக வீரர்கள் விக்கெட் விழுந்தாலும் கொண்டாட முடியாது
நடுவர்கள் கையுறை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்

6) கிரிக்கெட் பந்துகளை பளபளப்பாக்க எச்சிலை பயன்படுத்தக் கூடாது. ஆனால் வியர்வையை பயன்படுத்த தடையில்லை என்று பல விதிகளை ஐசிசி அறிவித்துள்ளது.

ஐ.சி.சி வெளியிட்டுள்ள இந்த விதிமுறைகள் கண்டிப்பாக சர்வதேச போட்டிகளில் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த விதிமுறைகள் அடங்கிய இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement