- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியா சொதப்பியதாக கம்பீர் சொன்னது சரி என்பதை நிரூபித்த.. தெ.ஆ தொடருக்கான ஐசிசி ரேட்டிங்

இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. கொல்கத்தாவில் நடைபெற்ற அத்தொடரின் முதல் போட்டி 3 நாட்களுக்குள் முடிந்தது. அதில் தென்னாப்பிரிக்கா வென்ற நிலையில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. அந்தத் தோல்விக்கு கொல்கத்தாவின் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருந்தது முக்கிய காரணமானது.

அது பற்றி கேட்டதற்கு கொல்கத்தாவில் தாங்கள் தான் அப்படிப்பட்ட பிட்ச் வேண்டுமென்று கேட்டு வாங்கியதாக பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்தார். இருப்பினும் அந்த பிட்ச்சில் இந்தியா சொதப்பலாக பேட்டிங் செய்ததே தோல்விக்கு கம்பீர் தெரிவித்தது ரசிகர்களை கடுப்பேற்றியது. ஏனெனில் கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா வரலாறு காணாத ஒய்ட்வாஸ் தோல்வியை சந்திப்பதற்கும் சுழலுக்கு சாதகமான பிட்ச்களே முக்கிய காரணமானது.

- Advertisement -

கம்பீரின் கருத்தை:

ஆனாலும் அதிலிருந்து பாடத்தைக் கற்காத கௌதம் கம்பீர் தலைமையிலான இந்திய அணி மீண்டும் அதே போன்ற பிட்ச்சை அமைத்து தோற்றது ரசிகர்களைக் கடுப்பேற்றியது. அடுத்ததாக கௌகாத்தியில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டி 5 நாட்கள் வரை சென்றது. இருப்பினும் அப்போட்டியில் மோசமாக பேட்டிங் செய்த இந்திய அணி 25 வருடங்கள் கழித்து தெனாப்பிரிக்காவிடம் சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா விளையாடிய டெஸ்ட் தொடரின் மைதான மதிப்பீடுகளை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன் படி கொல்கத்தா மைதானத்தின் பிட்ச்சுக்கு “திருப்தி” வெளிப்புற களம் “மிகவும் நன்று” என்ற மதிப்பீடுகளை ஐசிசி வழங்கியுள்ளது. ஐசிசி கொடுத்துள்ள இந்த மதிப்பீடு இந்திய ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்துள்ளது.

- Advertisement -

சரியாக்கிய ஐசிசி ரேட்டிங்:

ஏனெனில் 3 நாட்களுக்குள் போட்டி முடியும் அளவுக்கு கொல்கத்தா பிட்ச் சுழலுக்கு சாதகமாக ஒருதலைபட்சமாக இருந்தது. அதனால் அதற்கு ஐசிசி “சுமார்” என்ற ரேட்டிங்கை வழங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது கொல்கத்தா பிட்ச் திருப்திகரமாக இருந்ததாக ஐசிசி கொடுத்துள்ள மதிப்பீடு கௌதம் கம்பீரின் கருத்தை சரி என்பதை நிரூபிப்பதாக அமைகிறது.

இதையும் படிங்க: எத்தனை பேர் வந்தாலும் 2026 ஐ.பி.எல் தொடருக்கான கே.கே.ஆர் அணியின் கேப்டன் இவர்தான் – விவரம் இதோ

அதிலிருந்து கொல்கத்தா பிட்ச்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக விளையாடியதே தோல்விக்கு காரணம் என்று சொல்ல வேண்டியுள்ளது. அதே போல 2வது போட்டி நடைபெற்ற கௌகாத்தி மைதானத்தின் பிட்ச்சுக்கு “மிகவும் நன்று” என்ற மதிப்பீட்டை ஐசிசி வழங்கியுள்ளது. அதனுடைய வெளிப்புற களத்திற்கும் “மிகவும் நன்று” என்ற ரேட்டிங்கை ஐசிசி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -