உலகின் தலைசிறந்த வீரரான ஜாக் காலிஸ்க்கு ஐ.சி.சி அளித்த மிகப்பெரிய கவுரவம் – விவரம் இதோ

Kallis

இந்த வருடத்திற்கான ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருடா வருடம் இந்த விருது அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த விருதிற்கு இதுவரை 93 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் இணைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஐசிசி வழங்கும் மாதாந்திர உதவித்தொகை, பெருமையும் ,மரியாதையும் கிடைக்கும்.

icc

இந்நிலையில் இந்த வருடத்தின் ஹால் ஆஃப் ஃபேம் விருதுகள் 3 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ், இங்கிலாந்து அணியின் முன்னாள் பெண்கள் கிரிக்கெட் கேப்டன் லிஸ் ஸ்தலேக்கர், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜாகிர் அப்பாஸ் ஆகியோருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் ஜாக் காலிஸ் தன் ஆடிய காலகட்டத்தில் மிகப் பெரிய ஆல் ரவுண்டராக இருந்தவர். தென் ஆப்பிரிக்க அணிக்கு 166 டெஸ்ட் போட்டிகளிலும், 328 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி 13,289 ரன்களும் 11589 ரன்களும் குவித்துள்ளார். பந்துவீச்சில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 292 விக்கெட்டுகளும் ஒருநாள் கிரிக்கெட்டில் 273 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருக்கிறார்.

Kallis

1995 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியவர், 2013ஆம் ஆண்டு கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடினார். மேலும் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படுவதற்கு ஓய்வுபெற்று குறைந்தது ஐந்து வருடங்கள் ஆகி இருக்க வேண்டும்.

- Advertisement -

Dravid

தற்போது எந்த விதமான கிரிக்கெட் போட்டியிலும் ஆடிக் கொண்டிருக்க கூடாது. கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னர் இதே விருது ராகுல் டிராவிட்டுக்கு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.