டி20 உலகக்கோப்பையில் பும்ரா ஆடனும்னா ஒரு வழி இருக்கு – ஐ.சி.சி மருத்துவர் கொடுத்த ஐடியா

Jasprit Bumrah
- Advertisement -

டி20 உலக கோப்பை தொடரானது நெருங்கி வரும் வேளையில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த டி20 உலகக் கோப்பை தொடரின் முக்கிய வீரராக பார்க்கப்படும் பும்ரா காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளது இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் பவுலிங் யூனிட் அதிகமாக சார்ந்து இருப்பது பும்ரா தான் என்றால் அது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றுதான்.

Bumrah 1

- Advertisement -

ஏனெனில் சமீபகாலமாகவே டெத் ஓவர்களில் பந்து வீச சிரமப்பட்டு வரும் இந்திய அணியானது அதிக அளவில் ரன்களை வாரி வழங்கி வருகிறது. அந்த குறைபாட்டை போக்கும் வீரராக பார்க்கப்படும் பும்ரா மிகச் சிறப்பாகவே செயல்பட்டு வந்தார். இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்றிருந்த பும்ரா பயிற்சி போது ஏற்பட்ட அசவுகரியத்தினால் இந்த தென்னாப்பிரிக்க தொடரிலிருந்து விலகினார்.

பின்னர் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அவருடைய காயம் தீவிரம் அடைந்து இருப்பதால் அவர் டி20 உலக கோப்பையிலும் விளையாட மாட்டார் என்றும் நேரடியாக அவர் பெங்களூரு சென்று தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மற்றும் சிகிச்சை ஆகியவற்றை எடுத்துக் கொள்வார் என்றும் கூறப்பட்டுள்ளது. அதோடு பும்ரா மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்ப நான்கு முதல் ஆறு மாத காலம் வரை ஆகும் என்பதனால் தற்போது இந்திய ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர்.

Bumrah

இந்நிலையில் பும்ராவின் காயம் குறித்தும் அவர் டி20 உலக கோப்பையில் விளையாட இருக்கும் வாய்ப்பு குறித்தும் பேசியுள்ள ஐசிசி மருத்துவர் ஒருவர் கூறுகையில் : பும்ராவிற்கு ஏற்பட்டுள்ள காயம் அவருடைய கரியருக்கே ஆபத்து விளைவிக்கும் அளவிற்கு பெரிய காயம் இல்லை. இந்த காயத்திற்கு அறுவை சிகிச்சை எல்லாம் தேவைப்படாது. ஆனால் அதே வேளையில் அவர் இந்த காயத்திலிருந்து மீண்டு வர பல மாதங்கள் ஆகும்.

- Advertisement -

இது மாதிரியான காயங்களுடன் சிலர் வலிநிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொண்டு விளையாடி இருக்கின்றனர். அந்த வகையில் டி20 உலக கோப்பையில் பும்ரா நிச்சயம் விளையாட வேண்டும் என இந்திய அணி நிர்வாகம் விரும்பினால் வலி நிவாரணிகளை எடுத்துக்கொண்டு அவரை விளையாட வைக்கலாம்.

இதையும் படிங்க : பும்ராவுக்கு பதில் விளையாட அவர்களே தகுதியானவர்கள் – 4 பேர் பட்டியலை வெளியிட்ட திலிப் வெங்சர்கார்

ஆனால் அவரது இயல்பான ஆட்டத்தை அப்படி மாத்திரைகளை உட்கொண்ட பின்னர் விளையாட முடியாது. இதுகுறித்து பிசிசிஐ தான் முடிவு எடுக்க வேண்டும். அவருடைய பிட்னஸ்ஸை கருத்தில் கொண்டு அவர்களே இதற்கு உண்டான தீர்வை வழங்க வேண்டும் என ஐசிசி மருத்துவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement