டி20 உலகக் கோப்பையில் இந்த பிரச்சனை வரக்கூடாது. இந்த விதியை கொண்டுவந்தே ஆகனும் – ஐசிசி ஆலோசனை

Cup
- Advertisement -

கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் மகளிருக்கான டி20 தொடர் ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை எளிதாக வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

- Advertisement -

இந்த தொடரில் இந்திய மகளிர் அணி மற்றும் இங்கிலாந்து மகளிர் அணி அரையிறுதிப் போட்டியில் மோதின. ஆனால் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் அந்த அரையிறுதிப் போட்டி டாஸ் கூட போடமுடியாமல் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து அப்போதே இங்கிலாந்து அணியின் கேப்டன் கண்ணீர் வடித்தார்.

மேலும், லீக் சுற்றில் அதிக புள்ளிகள் எடுத்ததன் அடிப்படையில் இந்திய அணி இறுதிப் போட்டியில் நேரடியாக தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்திற்கு மறு நாள் ஆட்டம் வைக்கப்படவில்லை. இறுதிப்போட்டிக்கு மட்டுமே மாற்று நாள் வைப்பது என ஐசிசி இதனை எளிதாக விட்டுவிட்டது.

aus w

ஆனால் ஐ.சி.சி.யின் இந்த விதிமுறைகள் முரண்பாடுகள் அமைந்ததாகவும், சிக்கல்கள் அடங்கியதாகவும் இருப்பதாக அது தொடர்பாக பல முன்னாள் வீரர்களும் தங்களது கடும் அதிருப்தியை ஐ.சி.சி க்கு எதிராக நேரடியாக வெளிப்படுத்தினார்கள்.

- Advertisement -

தற்போது இதே விஷயம் ஆண்கள் கிரிக்கெட்டிற்கு மரபாக உள்ளது. ஆண்கள் டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இறுதிப் போட்டிக்கு மட்டுமே மாற்று நாள் வைக்கப்பட்டுள்ளது. அரையிறுதிச் சுற்றுக்கு மாற்றுநாள் வைக்க வேண்டும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தற்போது ஐசிசிக்கு கோரிக்கை வைத்துள்ளது.

Rain

மேலும் இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு எட்டப்பட வேண்டும் என்றும் அந்நாட்டு நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த விடயம் தீவிரம் அடைந்துள்ளதால் விரைவில் இதற்கு தீர்வு காணப்படும் என்று தெரிகிறது.

Advertisement