என்ன நடந்தாலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மாற்றம் இருக்காது – ஐ.சி.சி உறுதி

test

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரனோ எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து இங்கிலாந்தை சாராத மக்கள் தங்களுடைய நாட்டுக்கு வரக்கூடாது என்கிற கட்டுப்பாட்டை இங்கிலாந்து விதித்துள்ளது.கொரோனா பரவலை தடுக்கும் வண்ணம் இந்த புதிய ஆணையை இங்கிலாந்து கவர்மெண்ட் அண்மையில் வெளியிட்டுள்ளது. இது இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. ஏனென்றால் இந்த ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தில் உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

INDvsNZ

இங்கிலாந்து இப்படி சட்டம் பிறப்பிக்க, இந்திய அணி வீரர்கள் எவ்வாறு இங்கிலாந்துக்குச் சென்று விளையாட போகிறார்கள் என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு விடை அளிக்கும் வண்ணம் ஐசிசி தற்பொழுது நம்பிக்கை தரும் வார்த்தைகளை கூறியுள்ளது. இது சம்பந்தமாக அண்மையில் பேசியுள்ளார் ஐசிசி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி திட்டமிட்டபடி இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும்.

இறுதிப் போட்டி ஜூன் 18-ஆம் தேதி தொடங்கப்பட்டு 22 ஆம் தேதி வரை இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் முன்னரே திட்டமிட்டபடி நல்ல வகையில் நடத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் மிகப் பாதுகாப்பான முறையில் இந்த இறுதிப் போட்டியை நடத்த ஐசிசி அதற்கான திட்டங்களை தற்பொழுது ஆலோசித்து வருகிறது.

INDvsNZ

மேலும் அனைத்து நாடுகளிலும் தற்பொழுது கிரிக்கெட் தொடர் எவ்வாறு பாதுகாப்பான முறையில் நடைபெற்று வருகிறதோ அதே போல் பாதுகாப்பான முறையில் இந்த இறுதிப் போட்டி இங்கிலாந்து இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளது. ஐசிசி கூறியுள்ள இந்த தகவல் இந்திய ரசிகர்களை மகிழ்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

- Advertisement -

Ind-lose

2019ஆம் ஆண்டு இதற்கு முன்னர் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் 50 ஓவர் உலக கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் சந்தித்தனர், அதில் நியூசிலாந்து வெற்றி பெற்று இந்திய அணியின் உலகக் கோப்பை கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அதற்கு பழிதீர்க்கும் வண்ணம் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்த வேண்டும், என்பதே அனைத்து இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக தற்பொழுது உள்ளது.