டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடக்காது – வெளியான அதிரடி அறிவிப்பு

INDvsNZ

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆன ஐசிசி முதல்முறையாக தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களை நடத்தி வருகிறது. ஒருநாள் போட்டியில் சுவாரசியம் மற்றும் டி20 போட்டிகளின் விறுவிறுப்பு ஆகியவை அதிகரித்துள்ள நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கான முக்கியத்துவம் குறைந்து வந்த வேலையில் டெஸ்ட் போட்டிகளை முன் நிறுத்துவதற்காக ஐசிசி இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை கொண்டு வந்தது.

Williamson-1

இதற்கான வரவேற்பும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு கிடைத்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அனைத்து அணிகளும் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்று விளையாடி தற்போது முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியாவும், நியூசிலாந்தும் இறுதிப் போட்டியில் வருகிற ஜூன் 18-ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் லண்டனில் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது போட்டி அங்கு நடத்தக்கூடாது என்றும் வேறொரு மைதானத்தில் நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வீரர்களை லார்ட்ஸ் மைதானத்தை சுற்றியுள்ள தங்க வைப்பது சற்று சவாலான விடயம் என்பதால் மைதானத்தை மாற்ற திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி சவுதாம்ப்டன் நகரில் உள்ள Ageas பவுல் மைதானத்தில் நடத்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் மைதானத்தை ஒட்டியே நட்சத்திர விடுதி உள்ளதால் வீரர்களை தக்க வைப்பதும் எளிது என்பதால் அங்கு போட்டியை நடத்துவது திட்டம் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

lords cricket ground

இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி திட்டமிட்டபடி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறாது என்றும் அதற்கு பதிலாக சவுதாம்ப்டன் நகரில் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் ஐ.சி.சி.யிடம் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.