இனிமேல் கேப்டன்களுக்கு மட்டும் அல்ல. இவர்களுக்கும் அபராதம் – விதியை மாற்றி அதிரடி காட்டிய ஐ.சி.சி

Kohli-4
- Advertisement -

ஐசிசி தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிகள் பலவற்றைக் கொண்டுவந்துள்ளது. அதன்படி மாற்றுவீரர்கள் பேட்டிங் மற்றும் பவுலிங் செய்யலாம் என்ற விதியை கொண்டுவந்தது ஐசிசி. தற்போது மற்றொரு அதிரடியான விதியை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

icc

- Advertisement -

ஒருநாள் போட்டியில் வழக்கமாக குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்கவில்லை என்றால் கேப்டன்களுக்கு ஓரிரு போட்டிகளில் தடை விதிக்கும் முறை இதுவரை நடைமுறையில் இருந்தது. மேலும் அபராதம் விதிக்கும் முறையும் இருந்தது.

ஆனால் தற்போது கொண்டுவந்துள்ள விதிமுறைப்படி மெதுவாக பந்து வீசினால் கேப்டன்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. மேலும் கேப்டனுக்கு மட்டுமின்றி அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் அபராதம் மட்டும் விதிக்கப்படும் என்ற ஐசிசி அறிவித்துள்ளது.

Kohli-3

மற்றபடி போட்டிகளில் விளையாட கேப்டன்களுக்கு தடையோ அல்லது தகுதி இழப்பு புள்ளியோ எதையும் இனிமேல் கேப்டன்களுக்கு வழங்காது என்று ஐசிசி கூறியுள்ளது. வரும் 1ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து இந்த விதிமுறை நடைமுறைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement