இந்திய அணி பரம எதிரியாக கருதும் அந்த அணியுடன் கிரிக்கெட் தொடர் நடக்குமா ? – ஐ.சி.சி தலைவர் கருத்து

Greg-Barclay
- Advertisement -

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு கிரிக்கெட் வாரியங்கள் அமைக்கப்பட்டு அந்நாட்டில் கிரிக்கெட் போட்டிகள் சரியாக திட்டமிடப்பட்டு, முறையாக நடத்தும். இப்படி அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களையும் இணைத்து அவர்களுக்கிடையேயான போட்டிகளை முறைப்படி அட்டவணைகளை தொகுத்து உலக நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் தொடர்களை நடத்தி அவர்களை நிர்வகிக்கும் அமைப்பு தான் உலக கிரிக்கெட் கவுன்சில் ஆன ஐசிசி (ICC). இந்த ஐசிசி அமைப்பின் மூலம் உலக நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர்கள் முறையாக அட்டவணைப்படுத்தப்படும்.

icc

- Advertisement -

மேலும் அனைத்து நாடுகளையும் ஒன்றிணைத்து 50 ஓவர் உலகக் கோப்பை, டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போன்ற அனைத்து தொடர்களையும் ஐ.சி.சி நடத்தும். அப்படி மிகப்பெரிய செயல்களை செய்யும் அந்த ஐசிசி அமைப்பிற்கு ஒரு தலைவர், அதன் குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் என ஒரு பெரிய கூட்டமே பல பெரிய கடினமான வேலைகளை செய்கின்றனர்.

அந்த வகையில் தற்போது ஐசிசி அமைப்பின் புதிய தலைவராக நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரேக் பார்க்லே அண்மையில் பதவியேற்றார். இந்நிலையில் அவர் பதவி ஏற்றதும் ஊடகங்களுக்கு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கிரிக்கெட் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு தனது பதிலை அளித்தார். அது மட்டுமின்றி பல்வேறு விடயங்களையும் மனம் திறந்து பகிர்ந்து கொண்டார். அப்படி அவர் பகிர்ந்த தகவலில் இந்தியா-பாகிஸ்தான் தொடர் குறித்து சில கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

greg barclay 1

கிரிக்கெட் தொடர் என்றாலே குறிப்பிட்ட இரு அணிகளுக்கு இடையேயான தொடர் பெரிய அளவில் பேசப்படும். அந்த வகையில் இந்தியா-பாகிஸ்தான் தொடர் என்றாலே பரம எதிரிகளான இரு அணிகளுக்கு இடையேயான தொடர் என்று ரசிகர்கள் அறிந்ததே. எப்பொழுது இந்தியா பாகிஸ்தான் தொடர் நடைபெற்றாலும் வீரர்களை விட ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்புடன் இருப்பார்கள். அதுமட்டுமின்றி இணையத்திலும் ரசிகர்கள் மோதிக் கொள்வார்கள். அந்த அளவிற்கு இந்தியா-பாகிஸ்தான் தொடர் பரபரப்பாக நடைபெறும்.

- Advertisement -

இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் குறித்து பேசிய புதிய தலைவர் கூறுகையில் : எல்லாரையும் போலவே நானும் இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டியை காண ஆர்வமுடன் இருக்கிறேன். இரு நாடுகளும் முன்பு இருந்தது போல மீண்டும் கிரிக்கெட் உறவை தொடங்க வேண்டும். இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனைகளை நான் நன்றாக அறிவேன். ஆனால் இவ்விரு அணிகளும் மீண்டும் விளையாடும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளை ஐசிசி நிச்சயம் தொடர்ந்து மேற்கொள்ளும்.

Pakistan 1

எப்போதாவது விளையாடாமல் தொடர்ச்சியாக இரு அணிகளும் விளையாடக் கூடிய வாய்ப்புகளை நாங்கள் உருவாக்க முயற்சிகளை மேற்கொள்வோம். இது தவிர இந்தியா பாகிஸ்தான் கட்டாயமாக விளையாட வேண்டும் என எங்களால் நிர்பந்திக்க முடியாது. அப்படி செய்வது ஒருபோதும் சரியானதாக இருக்காது. இருந்தாலும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான தொடர்களை நடத்த நாங்கள் முயற்சிகளை மேற்கொள்வோம் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement