உங்க பவுலிங் ஸ்டைல் ரூல்ஸ்ஸை மீறி இருக்கு. 21 வயது பாக் வீரரை தடை செய்த ஐ.சி.சி – விவரம் இதோ

Muhammad-Hasnain
- Advertisement -

கிரிக்கெட் போட்டிகளில் அவ்வபோது வரைமுறையை மீறி பந்து வீசும் சில பவுலர்களை ஐசிசி தடை விதித்ததை நாம் பார்த்திருக்கிறோம். இதில் அதிகப்படியாக சிக்குவது பாகிஸ்தான் வீரர்கள் தான். அந்த வகையில் தற்போது 21 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளர் ஒருவருக்கு ஐசிசி தடைவிதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி பாகிஸ்தான் அணிக்காக கடந்த 2019ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இருபத்தி ஒரு வயது முகமது ஹஸ்னைன் இது வரை பாகிஸ்தான் அணிக்காக 8 போட்டி ஒருநாள் போட்டியில் விளையாடி 12 விக்கெட்டுகளையும், 18 டி20 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

muhammad hasnain 1

- Advertisement -

இந்நிலையில் அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பாஷ் தொடரில் சிட்னி அணிக்காக விளையாடி வருகிறார். சிட்னி மைதானத்தில் நடைபெற்ற ஒரு போட்டியின்போது களத்தில் இருந்த நடுவர் முகமது ஹஸ்னைன் தவறான முறையில் பந்து வீசுகிறார் என்று புகார் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டிருந்தார். அதனை அடுத்து கடந்த ஜனவரி 19ஆம் தேதி முகமது ஹஸ்னைன் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

ஆனால் அவர் பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாட வேண்டும் என்கிற காரணத்தினால் அவருடைய சோதனை பாகிஸ்தான் மையத்திற்கு மாற்றப்பட்டது. அதன்படி லாகூரில் நடைபெற்ற பரிசோதனையின்போது முகமது ஹஸ்னைன் பந்துவீச்சை பரிசோதிக்கையில் அவர் ஸ்லோ பவுன்ஸ் மற்றும் பவுன்சர் ஆகிய பந்துகளை வீசும்போது கைமுட்டி வரம்பு மீறி 15 டிகிரி வரை செல்வதாகவும் அது விதிமுறைக்கு அப்பாற்பட்டது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

muhammad hasnain 2

மேலும் அவரது தண்டனை குறித்து உறுதிசெய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அவர் விதிமுறைகளை மீறி தனது கையை சுழற்றுகிறார். இதன் காரணமாக சர்வதேச போட்டியில் இருந்து அவர் தடை விதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறியுள்ளது. மேலும் அவருக்கு என ஒரு பந்துவீச்சு ஆலோசகரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே நியமிக்கும் என்றும் அவர் தனது பந்துவீச்சை சரி செய்து மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்புவார் என்றும் கூறியுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : வெஸ்ட்இண்டீஸ் ஒருநாள் தொடரில் சூப்பர் சாதனையை படைக்க போகும் ரோஹித் சர்மா – விராட் கோலி ஜோடி

தற்போது அவர் ஐசிசி தடை செய்யப்பட்டுள்ளதால் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாட முடியாது என்றும் தனது அந்த பிரச்சினையை சரி செய்து கொண்டால் மீண்டும் அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement