வெஸ்ட்இண்டீஸ் ஒருநாள் தொடரில் சூப்பர் சாதனையை படைக்க போகும் ரோஹித் சர்மா – விராட் கோலி ஜோடி

Rohith
- Advertisement -

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இந்தியா பங்குபெறும் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் முதலாவதாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முழுவதும் பிப்ரவரி 6, 9, 12 ஆகிய தேதிகளில் அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது. இந்த தொடர் ரசிகர்கள் அனுமதியின்றி மூடப்பட்ட காலி மைதானத்தில் நடைபெற உள்ளது.

INDvsWI

- Advertisement -

அதன்பின் நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் முழுவதும் உலகப் புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக அகமதாபாத் நகரை சென்றடைந்துள்ள இரு அணி வீரர்களும் அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ரோஹித் – விராட்:
கடந்த வருடம் இந்தியாவின் புதிய டி20 கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்த ரோகித் சர்மா கடந்த டிசம்பர் மாதம் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இருப்பினும் அப்போது காயமடைந்த அவர் சமீபத்தில் நடந்த தென்ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது அதிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ள அவர் முழு நேர இந்திய வெள்ளைப்பந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட பின் முதல் முறையாக கேப்டனாக களமிறங்க உள்ளார்.

rohith

மறுபுறம் இந்தியாவின் 3 வகையான கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக இருந்த விராட் கோலி கடந்த 2 – 3 மாதங்களுக்குள் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் கேப்டன் பதவியில் இருந்து படிப்படியாக விலகி சாதாரண வீரராக விளையாட துவங்கியுள்ளார். குறிப்பாக ரோகித் சர்மா தலைமையில் முதல் முறையாக இந்த தொடரில் தான் விராட் கோலி ஒரு சாதாரண வீரராக விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

புதிய சாதனை படைப்பார்களா:
தற்போதைய இந்திய அணியில் உச்சபட்ச நட்சத்திரங்களாக விளங்கும் இவர்கள் ஒன்றாக மீண்டும் இணைந்து விளையாடுவதை பார்ப்பதற்காக இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஒருநாள் தொடரில் இந்த ஜோடி புதியதாக ஒரு சாதனையை படைக்க உள்ளது.

Rohith-1

அதாவது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறும் இந்த 3 ஒருநாள் போட்டிகளில் இந்த ஜோடி இன்னும் 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கும் பட்சத்தில் “ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 5000 ரன்களை குவித்த 3வது இந்திய ஜோடி” என்ற புதிய சாதனையை படைப்பார்கள். மேலும் ஒட்டுமொத்த ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 5000 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த 8வது ஜோடி என்ற பெருமையையும் இவர்கள் பெறுவார்கள். இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவும் விராட் கோலியும் இணைந்து 81 போட்டிகளில் 4906 ரன்களை 64.55 என்ற மிகச் சிறப்பான சராசரி விகிதத்தில் குவித்துள்ளார். இதில் 18 முறை இந்த ஜோடி 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியுள்ளது.

- Advertisement -

சச்சின் – கங்குலி வழியில்:
இவர்களுக்கு முன் ஒருநாள் கிரிக்கெட்டில் 5000 ரன்களை குவித்த முதல் ஜோடியாக முன்னாள் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் – சௌரவ் கங்குலி ஜோடி முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் ரோகித் சர்மா – ஷிகர் தவான் ஜோடியும் 5000 ரன்களை குவித்துள்ளது.

Rohith-1

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள் விளாசிய இந்திய ஜோடிகள் இதோ:

- Advertisement -

1. சச்சின் டெண்டுல்கர் – சௌரவ் கங்குலி : 8227 ரன்கள் (176 இன்னிங்ஸ்)

2. ரோஹித் சர்மா – ஷிகர் தவான் : 5023 ரன்கள் (112 இன்னிங்ஸ்)

3. ரோஹித் சர்மா – விராட் கோலி : 4906 ரன்கள் (81 இன்னிங்ஸ்)*

இதுமட்டுமல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ரோஹித் – கோலி ஜோடி இதுவரை 982 ரன்களை குவித்துள்ளது. எனவே விரைவில் துவங்க உள்ள ஒருநாள் தொடரில் இன்னும் 28 ரன்களை இந்த ஜோடி எடுக்கும் பட்சத்தில் “ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 1000 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் இந்திய ஜோடி” என்ற புதிய சரித்திரத்தையும் இவர்கள் படைப்பார்கள்.

Rohith

ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடிகள் இதோ:

1. ரோஹித் சர்மா – விராட் கோலி : 982* ரன்கள்
2. சச்சின் டெண்டுல்கர் – ராகுல் டிராவிட் : 557 ரன்கள்

Advertisement