ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. ஆனால் அந்த தொடருக்கு சென்று விளையாட மாட்டோம் என்று இந்தியா ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஏனெனில் எல்லைப் பிரச்சினை காரணமாக 2008க்குப்பின் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாத இந்தியா 2023 ஆசிய கோப்பையில் தங்களுடைய போட்டிகளை இலங்கையில் விளையாடி வெற்றி கண்டது.
அதே போல 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் தங்களுடைய போட்டிகளை இலங்கை அல்லது துபாயில் நடத்துமாறு ஐசிசிக்கு பிசிசிஐ கோரிக்கை வைத்திருந்தது. மறுபுறம் இந்தியா வராமல் போனால் ஸ்பான்சர்சிப் வருமானங்கள் குறைந்து விடும். அதன் காரணமாக எப்படியாவது தங்களுடைய நாட்டில் விளையாட வைக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது.
ஐசிசி அறிவிப்பு:
ஆனால் இந்தியா அதற்கு கடைசி வரை பிடி கொடுக்கவில்லை. அதனால் ஏமாற்றமடைந்த பாகிஸ்தான் வருங்காலங்களில் நாங்களும் இந்தியாவுக்கு சென்று விளையாட மாட்டோம் என்று எச்சரித்து வந்தது. இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஹைபிரிட் மாடலில் நடக்கும் என்று ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன் படி ஏற்கனவே விரும்பியது போல இந்தியா தங்களுடைய போட்டிகளை பாகிஸ்தானுக்கு வெளியே பொதுவான இடத்தில் விளையாட ஐசிசி சமாதித்துள்ளது.
அதே சமயம் 2027 வரை இந்தியாவில் நடைபெறும் தொடர்களில் பாகிஸ்தான் தங்களின் போட்டிகளை பொதுவான இடத்தில் விளையாடும் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது. இது பற்றி ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு. “2024 – 2027 ஐசிசி தொடர்களில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் இரு நாடுகளிலும் நடைபெறாமல் பொதுவான இடத்தில் நடக்கும்”
சமமான அறிவிப்பு:
“இது 2025 சாம்பியன்ஸ் ட்ராபிக்கு பொருந்தும். இந்தியாவில் நடைபெறும் 2025 மகளிர் உலகக் கோப்பை, இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் 2026 டி20 உலகக் கோப்பை ஆகியவற்றுக்கும் பொருந்தும். 2028 மகளிர் டி20 உலகக் கோப்பையை நடத்தும் உரிமை பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்தத் தொடருக்கும் இது பொருந்தும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீங்க இப்படி செய்வீங்கன்னு எதிர்பாக்கல.. என்னை ஏமாத்திடீங்க.. அஷ்வின் குறித்து – கும்ளே வருத்தம்
மேலும் 2029 – 2031 காலகட்டங்களில் நடைபெறும் மகளிர் உலகக் கோப்பைகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது. மொத்தத்தில் இந்த விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் ஆகிய அணிகளும் 2 விரும்பிய முடிவை ஐசிசி எடுத்துள்ளது. அதனால் இந்தியா – பாகிஸ்தான் ஆகிய 2 நாடுகளுமே தங்கள் கொள்கையில் வெற்றி பெற்றுள்ளது என்று சொல்லலாம்.



