நீங்க இப்படி செய்வீங்கன்னு எதிர்பாக்கல.. என்னை ஏமாத்திடீங்க.. அஷ்வின் குறித்து – கும்ளே வருத்தம்

Kumble
- Advertisement -

பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று முடிந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியோடு இந்திய அணியின் அனுபவ வீரரும், தமிழக ஜாம்பவானுமான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார்.

என்னை ஏமாத்திட்டீங்க அஷ்வின் :

இந்திய அணிக்காக கடந்த 2011-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அஸ்வின் இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போது 38 வயதாகும் அவர் இன்றளவும் நம்பர் 1 சுழற்பந்து வீச்சாளராக இந்திய அணியில் இருந்து வந்த வேளையில் நிச்சயம் அவர் அணில் கும்ப்ளேவின் 619 விக்கெட்டுகள் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் ஆஸ்திரேலிய தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய அஸ்வின் திடீரென இந்த தொடரின் பாதியிலேயே தான் ஓய்வு பெறுவதாக அறிவித்து தற்போது இந்தியா திரும்பி உள்ளார். அஸ்வினின் இந்த ஓய்வு அறிவிப்பை அடுத்து பல்வேறு தரப்பிலும் இருந்தும் அவருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

இந்நிலையில் தன்னுடைய சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அதனை தவறவிட்ட அஸ்வின் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான அணில் கும்ப்ளே கூறுகையில் : இந்திய அணியின் சாம்பியன் பவுலராக அஸ்வின் இருந்திருக்கிறார்.

- Advertisement -

நிச்சயம் இந்திய அணி இனி அவரை மிஸ் செய்யும். அஸ்வின் தன்னுடைய கரியரில் ஒரு மேட்ச் வின்னராக பல வெற்றிகளை இந்திய அணிக்கு பெற்றுத் தந்துள்ளார். என்னுடைய ரெக்கார்டை அவர்தான் முறியடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் தனிப்பட்ட காரணங்களால் தற்போது ஓய்வு முடிவை அவர் அறிவித்துள்ளது எனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதையும் படிங்க : இந்திய அணி இப்படி அவமானப்படுத்தியதே அஸ்வின் ஓய்வுக்கு காரணம்.. கும்ப்ளேவை முந்த ஆசையில்ல.. கவாஸ்கர்

உங்களுடைய முதல் அத்தியாயம் போல ஓய்வுக்கு பிறகு இரண்டாவது அத்தியாயமும் நல்லபடியாக இருக்க வாழ்த்துக்கள். நிச்சயம் உங்களை விரைவில் நேரில் சந்திக்கிறேன் என அணில் கும்ப்ளே தனது வருத்தத்தை தெரிவித்ததோடு ஒரு கருத்தையும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement