டி20 போட்டிக்கான புதிய விதிகளை வெளியிட்ட ஐசிசி. இனி சூப்பர் ஓவர் புதிய மாற்றங்கள் – அதிரடி அறிவிப்பு

ICC
- Advertisement -

கடந்த உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டி டையில் முடிந்தால் சூப்பர் ஓவர் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் வரும் டையில் முடிந்தால் வித்தியாசமாக அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் அந்த விதியின் மீது கடும் விமர்சனத்தை வைத்தனர்.

Stokes 2

- Advertisement -

தற்போது சூப்பர் ஓவர் விதிமுறையை ஐசிசி மாற்றியமைத்து புதிய விதிகளை வகுத்துள்ளது. அந்த விதிகளாவது..

1.ஒருவேளை சூப்பர் ஓவர் டையில் முடிந்தால் தொடர்ச்சியாக முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் விளையாடப்படும். ஒரு ஓவருக்கு 6 பந்துகள் வீசப்படும்.

2.ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் வீழ்ந்து விட்டால் அந்த அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வரும்.

- Advertisement -

3.புதிதாக சூப்பர் ஓவரில் ஒவ்வொரு அணிக்கும் தலா ஒரு ரிவ்யூ வழங்கப்படும்.

4. சூப்பர் ஓவர் மழை போன்ற காரணத்தால் நடைபெறவில்லை என்றால் அந்த போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்படும்.

- Advertisement -

5.போட்டியில் இரண்டாவது பேட்டிங் செய்த அணி சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்யும்.

6. இரு அணிகளும் தங்களுக்கு ஏற்றவாறு தேவையான பந்தை தேர்வு செய்து கொள்ளலாம்

- Advertisement -

7.ஒவ்வொரு சூப்பர் ஓவருக்கு இடைவேளை 5 நிமிடங்கள் மட்டுமே

8. இறுதியில் பில்டர்கள் கடைசி ஓவரில் பீல்டர்கள் எவ்வாறு நின்று இருந்தார்களோ அதே போன்று சூப்பர் ஓவரிலும் இருக்க வேண்டும்.

இவ்வாறு புதிதாக பல விதிகளை திருத்தி வெளியிட்டுள்ளது ஐசிசி.

Advertisement