- Advertisement -
உலக கிரிக்கெட்

கொரோனா அக்டோபர் மாதம் வரை தொடர்ந்தால் டி20 உலகக்கோப்பை நடைபெறுமா ? – ஐ.சி.சி அதிகாரபூர்வ அறிவிப்பு

உலக அளவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவத்தை நடத்தி வருகிறது. இதனால் பல நாடுகளின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. இருந்தாலும் உலக நாடுகள் பல ஊரடங்கை அறிவித்து தங்களது மக்களை காக்க போராடி வருகின்றனர். தற்போது உலக அளவில் ஐந்து லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக பல விளையாட்டு தொடர்களும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் ஆறு மாதம் கழித்து வரும் உலக கோப்பை டி20 தொடரும் இதனால் பாதிக்கப்படும் என்று தெரிகிறது. ஆஸ்திரேலியாவில் இந்த தொடர் நடக்க உள்ளது. தற்போது ஆஸ்திரேலியாவில் சில ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர்.

- Advertisement -

அந்த நாட்டில் வைரஸின் தாக்கம் தீவிரமாக இருப்பதை அறிந்த அந்த நாட்டு அரசு அடுத்த ஆறு மாத காலத்திற்கு விமான போக்குவரத்தை தடை செய்துள்ளது. இதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த 2020 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறுவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த தொடரை நடத்த வேண்டும் என்ற ஆவலுடன் ஆஸ்திரேலிய நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த தொடர் நடைபெற இன்னும் 6 மாத கால இடைவெளி இருப்பதால் அதற்கும் நிலைமை கட்டுக்குள் வரும் என்று அதனால் இந்த தொடரை நடத்த சில சாத்தியங்கள் உண்டு என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் உறுதியாக நம்புகிறது.

- Advertisement -

மேலும் ஆஸ்திரேலியாவில் குறிப்பிட்ட 6 அல்லது 7 மைதானங்களில் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதன்படி இந்த தொடரை திட்டமிட்டபடி நடத்தவும் தயாராகி வருகிறது. அப்படி நிலைமை மோசமாகவோ அல்லது நிலைமையில் முன்னேற்றம் இல்லை என்றால் 2022 ஆம் ஆண்டிற்கு மாற்றி வைக்கவும் திட்டம் வைத்துள்ளதாம்.

ஏற்கனவே இந்தியாவில் நடைபெற இருந்த ஐ.பி.எல் தொடரும் ரத்தாக அதிக வாய்ப்புள்ளது. அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு இந்தியாவில் டி20 உலககோப்பை தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by