கடந்த 10 ஆண்டுகளின் சிறந்த டெஸ்ட் அணியை வெளியிட்ட ஐ.சி.சி – தமிழக வீரருக்கும் இடம்

Ind-1
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆன ஐசிசி தற்போது கிரிக்கெட் ரசிகர்களின் சார்பாக கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக விளையாடிய கிரிக்கெட் வீரர்களை வைத்து ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை தனித்தனியாக அறிவித்துள்ளது. இந்த மூன்று வகையான அணியிலும் இந்திய வீரர்கள் சிலர் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக தோனி, கோலி, அஸ்வின் மற்றும் ரோஹித் ஆகியோர் இந்த பட்டியலில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர் என்றே கூறலாம். இந்திய அணியின் தற்போதைய கேப்டன் கோலி மூன்றுவிதமான ஐசிசி அணிகளிலும் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

Dhoni

- Advertisement -

அதேபோன்று தோனி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இடம்பெற்றுள்ளார். இந்த சகாப்தத்தின் அதாவது கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த வீரர்களை கொண்டு அமைக்கப்பட்ட ஒரு நாள் அணி வீரர்களுக்கான பட்டியலில் இந்திய வீரரான ரோகித் சர்மா மற்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான டேவிட் வார்னர் ஆகியோர் துவக்க வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக கோலி, ஏபி டிவில்லியர்ஸ், ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விக்கெட் கீப்பராக இந்திய அணியின் முன்னணி வீரர் எம்எஸ் தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தேர்வாகியுள்ளார். மேலும் பந்துவீச்சாளர்களாக மிட்செல் ஸ்டார்க், டிரென்ட் போல்ட், இம்ரான் தாஹிர், லசித் மலிங்கா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஐ.சி.சி. தேர்வு செய்த சிறந்த ஒருநாள் அணி இதோ :

- Advertisement -

1) ரோஹித் 2)வார்னர் 3) கோலி 4) ஏ.பி.டி 5) சாகிப் அல் ஹசன் 6) தோனி 7) ஸ்டோக்ஸ் 8)ஸ்டார்க் 9) போல்ட் 10) தாஹீர் 11) மலிங்கா

அதேபோன்று ஐ.சி.சி வெளியிட்டுள்ள டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை கேப்டனாக நியமித்துள்ளது. மேலும் தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வினும் இடம்பிடித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் ஏகப்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் அதிவேகமாக 150,200,250 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐ.சி.சி தேர்வு செய்த சிறந்த டெஸ்ட் அணி இதோ :

1. அலஸ்டைர் குக், 2. டேவிட் வார்னர், 3. கேன் வில்லியம்சன், 4. விராட் கோலி, 5. ஸ்டீவ் ஸ்மித், 6. குமார் சங்ககரா, 7. பென் ஸ்டோக்ஸ், 8. அஸ்வின், 9. டேல் ஸ்டெயின், 10, ஸ்டூவர்ட் பிராட், 11. ஜேம்ஸ் ஆண்டர்சன்.

Advertisement