டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடர் இவ்வாறு நடந்து பின்னர் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்கள் – ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Kohli gavaskar
- Advertisement -

டெஸ்ட் தொடர்கள் இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் தொடராக அமையாமல் இனிமேல் வரப்போகும் டெஸ்ட் போட்டிகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடராக நடைபெற உள்ளது என்று ஐசிசி அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டது.

Eng

- Advertisement -

டெஸ்ட் போட்டிகள் விளையாடத் தொடங்கி கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இந்த டெஸ்ட் போட்டிகளை சிறப்பிக்கும் வகையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்த ஐ.சி.சி முடிவு செய்து அனைத்து டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளிடமும் அனுமதி பெற்று தற்போது அந்த தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அதன்படி டெஸ்ட் விளையாட தகுதி பெற்ற நாடுகள் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் அவர்களது சொந்த மைதானத்திலும் மற்றும் வெளி மைதானத்தில் என இருமுறை டெஸ்ட் தொடர்களை மேற்கொள்ளும் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம் இலங்கை, தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் ஆகிய 9 அணிகள் பங்கேற்கின்றன.

ind

இந்த அனைத்து அணிகளின் டெஸ்ட் போட்டிகளில் முடிவு பெற்றவுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடைபெறும் அதில் வெற்றி பெறும் அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை வழங்கப்படும். மொத்தம் 27 டெஸ்ட் தொடர்கள் அடங்கிய இந்த சாம்பியன்ஷிப் தொடரில் 71 டெஸ்ட் போட்டிகள் இடம்பெறுகின்றன. வருகிற ஆகஸ்ட் மாதம் துவங்கி 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த டெஸ்ட் தொடர் நிறைவு பெறுகிறது இறுதி போட்டி லண்டனில் நடைபெறும் என்றும் ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement