டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை : டாப் 10-ல் 3 இடங்களை பிடித்த இந்திய வீரர்கள் – லிஸ்ட் இதோ

Ind
- Advertisement -

அவ்வப்போது நடைபெற்று முடியும் கிரிக்கெட் தொடர்களுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆன ஐசிசி மூன்று வகையான கிரிக்கெட்க்கும் தரவரிசைப் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி முடிவடைந்த பின்னர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ind

- Advertisement -

அந்த வகையில் தற்போது ஐசிசி வெளியிட்டுள்ள டாப் 10 பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 901 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 180 ரன்களை விளாசிய ஜோ ரூட் 2 இடங்கள் முன்னேறி 893 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ஸ்மித் மற்றும் லாபுசேன் ஆகியோர் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளனர். பின்னர் 5, 6, 7 ஆகிய இடங்களில் முறையே விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் பிடித்துள்ளனர்.

எப்பொழுதுமே தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் 776 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 8 வது இடத்திலும், ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் 9வது இடத்திலும், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வீரர் டிகாக் 10வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement