இந்தியாவில் டி20 உலகக்கோப்பை தொடர். ரசிகர்கள் மகிழ்ச்சி கோலிக்கு ராசி கிட்டுமா ? – ஐ.சி.சி அதிகாரபூர்வ அறிவிப்பு

Cup

ஐசிசி நடத்திவரும் டி20 உலகக் கோப்பைக்கான வரவேற்பு ரசிகர்களிடம் அதிகரித்து வருவதன் காரணமாக அவ்வப்போது டி20 உலகக் கோப்பை தொடர்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை நடைபெறும் என்று ஐசிசி ஏற்கனவே அறிவித்து இருந்தது.

ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் 18-ஆம் தேதி முதல் நவம்பர் 15ம் தேதி வரை நடைபெற இருந்த இந்த உலக கோப்பை தொடரானதுகொரோனா பரவல் காரணமாக ஆஸ்திரேலியாவில் நடத்தப்படாமல் இருக்கும் சூழ்நிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த நாட்களை பயன்படுத்தி பிசிசிஐ ஐபிஎல் கிரிக்கெட்டை நடத்த திட்டமிட்டுவிட்டது.

இந்த நாட்களில் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதாக முடிவு செய்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்த ஆண்டு நடைபெறவிருந்த டி20 தொடரை ரத்து செய்த ஐசிசி அந்த தொடரை அடுத்த ஆண்டு இந்தியாவில் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

அதன் பிறகு 2021ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலக கோப்பை தொடரை ஆஸ்திரேலியாவில் நடத்துவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பினை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

- Advertisement -

ஏனெனில் இதுவரை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஐசிசி தொடர்களை கைப்பற்றாமல் இருப்பது மட்டுமே ஒரு குறையாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருப்பதால் இந்த தடவை நிச்சயம் இந்திய அணி வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.