ஐ.சி.சி வெளியிட்ட புதிய டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியல். கோலியை பின்னுக்கு தள்ளிய இந்திய வீரர் – விவரம் இதோ

Kohli
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆன ஐசிசி அவ்வப்போது நடைபெறும் சர்வதேச தொடர்களின் அடிப்படையில் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் தரவரிசைப் பட்டியலை வெளியிடும். அந்த வகையில் தற்போது நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்குப் பின்னர் ஐசிசி t20 கிரிக்கெட் வடிவத்திற்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

INDvsAUS

- Advertisement -

ஆஸ்திரேலிய அணியை 2 க்கு 1 என்ற கணக்கில் வீழ்த்திய இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரை வெல்ல முக்கிய காரணமாக கோலி, தவான், ராகுல், பாண்டியா, ஜடேஜா, சாஹல் மற்றும் நடராஜன் ஆகிய அனைவரும் பங்களிப்பு கொடுத்தனர் என்று கூறலாம். ஒட்டுமொத்தமாக ஒரு அணியாக சிறப்பாக இந்திய அணி விளையாடியது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் வீரர்களான கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் முன்னேற்றமடைந்து டாப் 10 இடங்களுக்குள் வந்துள்ளனர். இதில் கேஎல் ராகுல் 3வது இடத்தில் பிடித்துள்ளார். ஏற்கனவே நான்காம் இடத்தில் இருந்த ராகுல் ஒரு இடம் முன்னேறி மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளார்.

அதேபோல கோலியும் ஒன்பதாம் இடத்தில் இருந்து 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த தொடரில் ராகுல் மூன்று போட்டிகளில் சேர்த்து 81 ரன்களை குவித்தார். கோலி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் 85 ரன்களை அதிரடியாக குவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் இங்கிலாந்து அதிரடி வீரர் டேவிட் மலன் முதல் இடத்திலும், பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரரான பாபர் அசாம் இரண்டாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement