டி20 உலகக்கோப்பையில் பங்கேற்கும் அணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள ஐ.சி.சி – விவரம் இதோ

Cup
- Advertisement -

இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடரானது இங்கு நிலவிவந்த கோரோனோ சூழல் காரணமாக தற்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும் என ஏற்கனவே ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. மேலும் இதற்கான அட்டவணையையும் சமீபத்தில் ஐசிசி வெளியிட்டிருந்தது. அதன்படி வரவிருக்கும் டி20 உலக கோப்பை தொடரானது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்திருந்தது.

cup

- Advertisement -

இந்த உலக கோப்பை தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஏற்கனவே நேரடியாக 8 அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில் மீதமுள்ள நான்கு அணிகள் தகுதி சுற்றின் அடிப்படையில் தொடரில் இணைவார்கள் குரூப் 1, குரூப் 2 ஆகிய இரண்டு பிரிவில் அணிகள் 8 அணிகள் உள்ளன.

குரூப் ஏ-வில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா ஆகிய அணிகளும் குரூப் பி-வில் பங்களாதேஷ், ஸ்காட்லாண்ட், ஓமன், பப்புவா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த இரண்டு குரூப்பில் இருந்து தகுதிபெறும் நான்கு அணிகள் குரூப் 1 மற்றும் குரூப் 2 ஆகியவற்றில் இணையும் என்று கூறப்பட்டுள்ளது.

schedule

குரூப்-1 : இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் உள்ளன. அதே போன்று குரூப்-2 : இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் உள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் 12 அணிகளுக்கும் சில கடுமையான விதிமுறைகளை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு அணியும் பயோ பபுள் பாதுகாப்பு வளையத்தை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

icc

ஒவ்வொரு அணியிலும் 15 வீரர்கள் மற்றும் 8 நிர்வாகிகள் மட்டுமே வரவேண்டும். அவர்களுக்கான செலவை ஐசிசி ஏற்கும் மற்றபடி கூடுதல் வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் தேவைப்பட்டால் அதற்குரிய செலவை ஐசிசி ஏற்காது என்றும் அந்த அணி நிர்வாகங்கள் ஏற்க வேண்டும் என கடுமையான திட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement